Once you read this, you might want to check the english review here, thus showing that everyone of us is schizophrenic at some level :-))
என் உயிரினும் மேலான பாயும் புலி ரஜினி தலைவனுக்கு,
ராயபுரம் 'ரஜினி' ஏகாம்பரம் எளுதிக்கறது.
நானும் என் குடும்பமும் நல்லா இருக்கோம்.
அங்க அண்ணி லதாம்மாவும், தங்கச்சிங்க ஐசுவரியாவும் சௌந்தரியாவும் நல்லா இருக்காங்களா? கொளந்த சௌந்தரியா கல்யாணத்துக்கு நம்ம யாரையுமே கூப்பிடல. பரவாயில்ல. நீதான் எவ்வளவு எங்களுக்கு செஞ்சிருக்கே... இது என்னா பெரிசு?
அது போவட்டும்...
என் உயிரினும் மேலான பாயும் புலி ரஜினி தலைவனுக்கு,
ராயபுரம் 'ரஜினி' ஏகாம்பரம் எளுதிக்கறது.
நானும் என் குடும்பமும் நல்லா இருக்கோம்.
அங்க அண்ணி லதாம்மாவும், தங்கச்சிங்க ஐசுவரியாவும் சௌந்தரியாவும் நல்லா இருக்காங்களா? கொளந்த சௌந்தரியா கல்யாணத்துக்கு நம்ம யாரையுமே கூப்பிடல. பரவாயில்ல. நீதான் எவ்வளவு எங்களுக்கு செஞ்சிருக்கே... இது என்னா பெரிசு?
அது போவட்டும்...
அதுக்கு பதிலாத்தான் 'எந்திரன்' குடுத்திருக்கியே...
சிவாஜிக்கு அப்புறம் ரொம்ப ஆசை ஆசையா காத்திருந்தோம். நேத்து வந்தவனெல்லாம் சுறா, எறான்னு பிகிலு வுடும்போது, நீ மட்டும் ரெண்டு வருசமா காணோமா, ரொம்ப பேஜாரா பூடிச்சு. நடுவுல அந்த குசேலன் வேற, இன்னும் உசுப்பேத்திடுச்சி.
ஆனா வெயிட் பண்ணதுக்கு தகுந்த மாதிரி சூப்பர் படம் குடுத்துட்ட தலைவா!
ஒரு நிமிசம் இரு... இந்த கை ஒரே வலி...
அது வேற ஒண்ணியும் இல்ல...
வியாளக்கிழம நம்ம ஆல்பட் தியேட்டர்ல உன் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யச் சொல்லோ, கொஞ்சம் வழுக்கி வுயிந்திட்டேன். வூட்டுல ஆத்தா 'டேய்! புத்தூருக்குப் போயி கட்டு போட்டுட்டு வாடான்னு' அளுவுது. நீ வேற அம்மா சொன்னாக் கேக்கணும்னு சொல்லிக்கீறியா... தோ, நாளக்கி நம்ம சிட்டிப்பயல போய் மூணாவது தபா பாத்துட்டு போலான்னுகீறேன்.
ஆனா, படம் டாப் டக்கருப்பா...
உன் தாடி என்ன? சிட்டியா வந்து கருணாசையும் சந்தானம் பயலையும் கலாய்க்கிறது என்ன? சூப்பரு தலைவா!
அப்பறம் நம்ம ஐஸுக்கிட்ட 'நான் குடுத்த முத்தம்லாம் தா'ன்னு சொல்றது பழசுன்னாக்கூட ஷோக்குதான்...
ஆமா! உன் கைக்கு என்னாச்சு? நம்ம சிட்டி ரோபோவுக்கு கண்ணாடி மாட்டச்சொல்லோ அந்த மாதிரி தடவுன? எங்களுக்காக ரொம்ப உழச்சிட்ட தலைவா! இமயமலைக்கு போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா!
நீயும் ஐஸுவும் நம்ம சேரிக்குள்ள வந்தப் பின்னால நம்ம எல்லயம்மா கணக்கா எல்லா பொருளையும் வச்சிட்டு போஸ் குடுத்த உடனே லேடீஸ் எல்லாம் கொலவை கொட்றது படா தமாஸு!
அது என்னா தலைவா? சங்கரு படத்துல யாராவது துணி இல்லாம இருக்கணுமா? பாய்ஸு, முதல்வன், இப்போ எந்திரன்... ஆனாலும் அந்த பேமானி போரா, உன்கிட்ட டகல்பாஜி காட்டும் போதே அவன நாலு தட்டியிருக்கணும்... அடுத்த தபா கவுனிச்சிக்கோ என்ன?
அந்த ட்ரெயின் சண்ட பாத்து என் உடம்பெல்லாம் மயிர் கூச்சாலாயிடுச்சிப்பா! அதுவும் நீ அந்த ட்ரான்ஸ்பார்மர்ல கை வச்ச உடனே எனக்கு ஷாக்கு! அப்புறம் நம்ம கோபாலுதான் சொன்னான்.. நீ மெசினுன்னு... என்னா நடிப்பு!!
இன்ட்ரோலுக்கு அப்பால, நீ ஐஸுவுக்கு சைடு கட்டலான்னு பாக்கறப்போ, ஒரே குஜால்தான்... அதுவும் ஒரு ரஜினிக்கே சிங்கி அடிச்சிக்கிட்டு இருந்த எங்களுக்கு ஒரே சமயத்துல 100 ரஜினி பார்த்தா எப்படி இருத்திருக்கும்... டாஸ்மாக் கடையே வீட்டுக்குள்ள வந்தா மாதிரி ஒரு கிக்கு!
அதுக்கு அப்பால நம்ம சங்கரு உன்ன வச்சி பாம்பு மாதிரியும், ராட்சசன் மாதிரியும், பெரிய சுவர் மாதிரியும் காட்டுனது ஒரே மெரசலாயிடுச்சி! படத்துக்கு முன்னால நானும் கோபாலும் அடிச்ச ரெண்டு குவார்ட்டர் மப்பும் அப்படியே இறங்கிடுச்சின்னா பார்த்துக்கோயேன்...
அப்புறம் சிட்டிய உன்னோட கம்ப்யூட்டர் நாலட்ஜி வச்சி 'மேட்டர் ஓவர்' பண்ணதுக்குப் பிறகுதான் எங்களுக்கு மூச்சு வந்துச்சி... எப்போ கம்ப்யூட்டர் படிச்சே, தலைவா?
போட்ட குவார்ட்டர்லாம் வேல செஞ்சிடுச்சா? அதுனால பாட்டுங்களை எல்லாம் ஒளுங்கா பார்க்க முடியல. ஆனாலும், 'அரிமா, அரிமா' பாட்டுக்கும் 'கிளிமஞ்சாரோ' பாட்டுக்கு மட்டும் அடக்கிட்டு உட்கார்ந்திட்டேன்னா பாரேன்!
ஆனாக்கூட நம்ம சிட்டிப்பயல், ஆடு மாதிரி சிரிக்கறது, 'ரோபோடா' அப்படின்னு ரவுசு வுட்ரறது எல்லாம் 'கமாய் பத்னி ரைட்டு!!'
கடோசில, நீயே உன் கை, கால் எல்லாம் உடைச்சி வைக்கும் போது, அப்படியே போய் ஸ்க்ரீனை கீசிடலாமான்னு தோணிச்சி.. நம்ம கோபாலுதான், 'டேய் ஏகாம்பரம், அது மெசினுடா'ன்னு சொன்னான்.
அதான் இல்ல?
யோசிச்சுப் பார்த்தா, அதான் தோணுது.
நீ பாஷாவுல, ஆனந்தராஜை மொதல் தடவயா போட்டுத் துவைக்கும் போது நானே அவனை நாஸ்தி பண்றாமாதிரி இருந்திச்சு!
அண்ணாமலைல, 'மலைடா, அண்ணாமலை' அப்படின்னு ராதாரவிகிட்ட பிலிம் காட்டும் போது, நானே அந்த ஹோட்டல் முதலாளி ஆயிட்ட மாதிரி இருந்திச்சி!
ஏன், நம்ம பாபாவுல, 'பாபா, கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்'ன்னு நீ சொல்லும்போது, என்னா சொல்றன்னு புரியலேன்னா கூட, தியேட்டர்ல உன்னோட சேர்ந்து எல்லாரும் ஒண்ணு, ரெண்டு,மூணு சொல்லியிருக்கோம்!
இதோ, இந்த சங்கரு எடுத்த சிவாஜியில நீ 'கண்ணா! பன்னிங்கதான் கூட்டம் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிளாத்தான் வரும்'னு சொல்லி எங்க வயித்தில பீர் வார்த்தியே, அது பஞ்ச் டயலாக்!
எந்திரன் சூப்பர்தான். புத்தூர்ல கட்டு போட்டுகிட்டு இன்னும் ரெண்டு தபா பார்த்திடுவேன். என்ன? வூட்டுல கொஞ்சம் குண்டான்லாம் அடகு வெக்கணும். அதுக்கென்னா, உன் படம் பார்க்க இது கூட செய்யலயின்னா எப்படி? அது தாண்டி, நம்ம கலைஞர் இருக்கும் போது என்னா கவலை? சன் டிவி காட்டியே நம்ம வயித்த ரொப்பிடுவாரு இல்ல?
ஆனா பாரு, நடுவுல கொஞ்சம் டாஸ்மாக் இல்லாதவே தூக்கம் வருது. இந்த விஞ்ஜானி எல்லாம் ஒரே ப்ரைம் நம்பரு, பிபோனக்கியா - அது என்னா கருமாந்தரமோ தெரியல, ஒரே கொட்ச்சலு :-(
கொஞ்சம் புரியறாப்போல,
'நம்ம நமீதா இடுப்பு சைசு என்ன?'
'பிரபு தேவாவும் நயன் தாராவும் கண்ணாலம் கட்டிக்குவாங்களா?'
'அடுத்த தபா எலீக்சன்லே ஒரு ஓட்டுக்கு எவ்வளவு துட்டு தருவாங்கோ?'
இப்படி நல்ல ஜெனரல் நாலட்ஜி கேள்வி கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்... நானும் தூங்கியிருக்க மாட்டேன்...
ஆமா? அது என்னா ஆ, ஊன்னா 'டெர்ரா, ஜெட்டான்னு' ஏதோ சொல்லிக்கினே இருந்தியே! படா ஷோக்குப்பா! அதெல்லாம் தானா வர்றது இல்ல!
அதுனாலதானோ என்னாவோ இங்கிலீஷு படம் பார்க்கறாமாதிரியே இருந்துது... வெள்ளக்காரன் படம்ன்னாக்க பலான சீனு ஒண்ணு ரெண்டு இருக்கும் - உன் படமாச்சே, அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.... தப்பு, சாமி கண்ணக் குத்திடும்...
ஆக மொத்தம், சங்கரு உன்ன அவன் படத்துல நடிக்க வெச்சிட்டான். நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு படத்துக்கு துட்டு சேர்த்துட்டோம். பாவம்! நீ கூட படத்துக்கு சம்பளம் வாங்கலியாம்! நம்ம கோபாலுதான் தந்தியில படிச்சு சொன்னான்...
பொண்ணுக்கு கண்ணாலம் செஞ்சிருக்கே!
ரெண்டு வருசம் ஒரு படம் நடிச்சு அதுக்கு டப்பு வாங்கல!
தலைவா! உன் தியாகமே, தியாகம்!
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சந்தேகம், தலைவா! தப்பா நெனச்சுக்காதே...
நம்ம கோபாலுதான் சொன்னான்... நீ என்னவோ அரசியலுக்கு வரவே மாட்டியாம். உனக்கு துட்டுதான் முக்கியமாம். அத்தோட நாங்கள் எல்லாம் அம்பேல்தானாம்...
உண்மையா தலைவா?
நீ 'உம்'னு சொல்லு... உடல் மண்ணுக்கு, உயிர் உனக்கு, கோட்டை நமக்கு!
உடம்பை பார்த்துக்கோ தலைவா! ரொம்ப சிகரெட் பிடிக்காதே! சீமை சரக்காவே சாப்பிடு!
இப்படிக்கு - டாஸ்மாக் கடை 916லிருந்து
உனக்காகவே உயிரோடு இருக்கும்,
ராயபுரம் ஏகாம்பரம்.
Excellent !!! This is my honest comment.
ReplyDeleteNalla naiyandi pa ... intha rutele poin nee ellaraum kalaikanumpa
ReplyDelete-sunthar
சூப்பர் கண்ணு.. படா ஷோக்கா சொன்னே போ... நீ ஒண்ணியிம் கவல வைக்காதே.. தலைவரு குய்ப்பமா இருக்காரு.. ரோஜன பண்ணி அரசியலுக்கு வருவாரு....அம்பட்டன் வராவதியாண்ட வந்தா வூட்டுக்கு வா....
ReplyDeleteஅருமையாக உள்ளது
ReplyDeleteஉடம்பை பார்த்துக்கோ தலைவா! ரொம்ப சிகரெட் பிடிக்காதே! சீமை சரக்காவே சாப்பிடு!
ReplyDeleteArumai:)
ReplyDeletethandhiyey govaal padikka solli ketta raayapuram ekaambaram, internet-la immaam beriya post ezhudhikeeraara ?? illa idhuvum, ekaambaram solla solla govaalu type adichadhaa ??
ReplyDelete:))))))))
ReplyDeleteதலைவா பின்னிபுட்டீங்க
ReplyDeleteஇன்றைய டாப் பிரபல பதிவாக WWW.SINHACITY.COM இல் உள்ளது
அருமை. உங்கள் எள்ளல் ரசிக்கத்தக்கது. தொடருங்கள்
ReplyDeleteஅவ்வ்வ்வ்!
ReplyDeleteவேறுபட்ட கோணத்துடன்! நன்று!
நீ பொம்பிளை என்றால் சாருவின் சின்னவீடு ஆம்பிளை என்றால் ஓரினச் சேர்க்கைத் தோழன்...
ReplyDeletekeep writing ...wishes
ReplyDeleteதல என்னா ரைடிங் போ, சும்மா கட்டிங்க ராவா அடிச்சா மாதிரி ஜிவுன்னு....
ReplyDeleteநீ ஒன்னியும் கவலைபடாத ஏகாம்பரம் .. தலைவரு பால்தாக்கரேவ மீட் பண்ணிட்டாராம் ... கடவுள்னு வேற சொல்லிருக்காருப்பா ... நாம எல்லாம் தலைவர தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆக்கணும்னு கஷ்டபடுறோம் ,... தலைவர் பிரதமர் பதவிக்கு குறி வச்சிருக்காருப்பா ... நாளைய பிரதமர் தலைவர் வாழ்க ..
ReplyDeleteஉங்க நையாண்டி கலக்கல்
அடித்து துவைத்து தோரணம் கட்டி தொங்கவிடுவதில் சாரு கில்லாடி எனில் நீங்கள் அவருக்கே பாடம் எடுப்பீர்கள் போல தெரிகிறதே.
ReplyDeleteஜெ. பாபு
கோவை
இன்னொரு தப சொல்லு , சூப்பரா கீது
ReplyDeleteமிக அருமையான கடிதம் ! எல்லாரது மனதிலும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள் !! வாழ்த்துகள்!
ReplyDeletePoda porampokku... kandravi....
ReplyDelete:)
ReplyDelete//என்ன? வூட்டுல கொஞ்சம் குண்டான்லாம் அடகு வெக்கணும். அதுக்கென்னா, உன் படம் பார்க்க இது கூட செய்யலயின்னா எப்படி?அது தாண்டி, நம்ம கலைஞர் இருக்கும் போது என்னா கவலை? சன் டிவி காட்டியே நம்ம வயித்த ரொப்பிடுவாரு இல்ல?//
ReplyDeleteExcellent mocking...
அப்படியே, க்ங்கொய்யால இதுவரைக்கும் கோல்கேட் பேஸ்ட்டும், பாண்ட்ஸ் பவுடரும், ஹமாம் சோப்பும், பெப்ஸ் ட்ரிங்சும், மாநகர வண்டியும், இப்படி எல்லாத்தயும் யூஸ் பண்றேன். ஆனாப் பாரு அவுனுங்கோ எனக்கு எந்த மரியாதையும் தர்ல. அதங்காட்டி அத்தயும் அடுத்தவாட்டி எழுதிக்கோ.
ReplyDeleteஅப்புறம் பாபா படம் ஊத்திக்கிச்சே, அப்ப நீ எங்க பீத்துண்ணப் போனீயான்னு யாரும் கேட்டாக்க அது நீயில்ல சாருண்ணு சொல்லிடு.
நம்ம இப்புடித்தான், டைரக்டரு சங்கரு, 'காதலன்'ல எழுதின மாதிரி, "அண்டா, குண்டா அடகு வைச்சி" ஸ்பெசல் ஷோ டிக்கிட் வாங்கி, கட்டிங் விட்டுன்னு, படம் பாத்துண்ணே, திரிவோம், ரஜனி சார் பாவம் நமக்காக வேண்டி, கஷ்டப்பட்டு இமயமலை போய் சாமியைப் பாக்கப் போவரு பாரேன். நமக்காவே வாழும் தெய்வ மச்சான்..ச்சீ.. மனித தெய்வம்.
ReplyDeleteஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதை இன்று புரிந்து கொண்டேன்.
ReplyDeleteஒரு இடுகை போட்டவுடன் இவ்வளவு பேர் வந்து பெயருடனும், பெயரற்றும் - கல்லுடனும் கனிவுடனும் பின்னூட்டம் இட, அவற்றைக் கண்டு மனம் பறந்தது என்னவோ உண்மைதான்.
வந்திருந்தவர்கள் வலையுலக ஜாம்பவான்கள்.
வாழ்த்துக்களுக்கும் வசவுகளுக்கும் நன்றி.
Super kannu pada chokka iruku unnoda kammendu
ReplyDeleteone of the greatest satire cooment i read in my entire life
ReplyDeletevayiththerichchal
ReplyDeleteExcellent... :-)
ReplyDeleteThis may be right in some context but I can't figure out Rajini's mass appeal.
ReplyDeleteMy daughter & Son born india and came to U.S 1998 when they are 16 & 13. Now my daughter is married and has one year old baby boy. They didn't like other Tamil movies, but they like Rajini movies and book the tikcet for $21.00 in ny and saw the 8.30 PM movie (waiting in queue from 7.00 PM in Jersey city)
They invite me for the movie, but I told them I don't want to see the movie for $21.00 (normally it is $9.00)
Wheny I ask my son & daughter abt this, they simply said appa it is Rajini (I realise its like MGR in back days) we want to see the movie. The mass appeal or hype wat u r going to say abt this, I don't know
Santoz
by the way me, my son & daughter like this. They agreed this, but they can't say why they want to see this movie the first day.
ReplyDeleteSantoz
ரஜினின்னா எந்த மொக்க சரக்கா இருந்தாலும் வித்துடும். நீயும் வித்துக்கோ நைனா!! சும்மா பாராட்டிட்டே இருந்தா ஒரு மனுசனுக்கு போர் அடிக்காதா.. இந்த படமே புர்லியே.. உனக்கு எப்புடி தமிழின் விடிவெள்ளி செக்ஸு மன்னன் ஹோமோ மன்னன் சாருவோட கத ல்லாம் புரிய போகுதோ!!
ReplyDeleteஜோரா கீதுப்பா...
ReplyDeleteரசிச்சு,ருசிச்சு படிச்சேன்.
i enjoyed ur comments
ReplyDelete/// ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதை இன்று புரிந்து கொண்டேன்.
ReplyDeleteஒரு இடுகை போட்டவுடன் இவ்வளவு பேர் வந்து பெயருடனும், பெயரற்றும் - கல்லுடனும் கனிவுடனும் பின்னூட்டம் இட, அவற்றைக் கண்டு மனம் பறந்தது என்னவோ உண்மைதான்.
///
Reason - Post is about Rajnikanth :) Neenga vaanathula parakaadheenga...
Dear Anony:
ReplyDeleteProbably I was not clear.
My writings, if they can be called so, are only ramblings...
What I meant was: the fact that Charu had referred to this post in his website caused the traffic to sky-rocket and caused so many comments to appear. That is the reason why I had referred it as எழுத்தாளனுக்கு எவ்வளவு செல்வாக்கு! And the writer is not me, but Charu :-)
Thanks for visiting, anyway...