Technology has improved so much!!!

சென்ற வார இறுதியில் நான்கு திரைப்படங்கள் பார்த்தேன். மூன்று ஆங்கிலம், ஒரு ஹிந்தி. அனைத்தும் சுவிட்சர்லாந்து நாட்டு ஓட்டலில் இணையம் வழியாக. (20 வெள்ளி சிண்டாவுக்கோ, மைண்ட்ஸ் பள்ளிக்கோ தானம் கொடுக்க வேண்டும்.)

சுலபமானவற்றை முதலில் கழட்டி விடலாம்.


Hannibal Rising - ஹானிபால் லெக்டராக ஆன்டனி ஹாப்கின்ஸ் நடித்து சகாப்தம் படைத்த கதாபாத்திரத்தின் ஆரம்பத்தைப் பற்றிய கதை என்பதால் ஆர்வத்துடன் புத்தகத்தை சமீபத்தில் படித்து ஏமாந்தேன். அப்பவே தெரிஞ்சு இருக்கணும். விதி வலியது. படம் பண்டல்...


பின்னர் - Dil Chahta Hai - தில் சாஹ்தா ஹை, 2001ல் வெளிவந்த இந்தப் படத்தைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தும், என்னவோ நான் பார்க்காததால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது என்றும் மக்களால் எள்ளி நகையாடப்பட்டேன். கடைசியில், மிஞ்சியது ஏமாற்றமே.

மூன்று உயிர் நண்பர்களின் கதை. காதல்னா நாக்க முக்க என்னும் ஆமீர் கான் ஒரு புறம்; 'சரோஜா பட வெங்கட் பிரபு' மாதிர் சைfப் அலிகான் - பார்த்த பெண்களிடம் உடனே காதல்வயம்; காதல்னா சும்மா இல்ல, அது வயிற்றுக்கு கீழே, குடலுக்கு மேலே, கணையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சதுர செ.மீ பரப்பளவில் ஆரம்பித்துப் பின் உடல், பொருள் ஆவி அனைத்தையும் காலி செய்யும் ஒரு வஸ்து என்று தன்னைவிட 15 வயது வயதான டிம்பிளுக்காக நண்பனையே கன்னத்தில் அறைந்து நட்பைக் காலி செய்யும் அக்ஷய் கன்னா. மேலும், ஆமீர் கானின் ஹீரோ ஸ்டேடஸ் கெடாமல் இருக்க, அவருக்குக் காதலின் உன்னதத்தை இத்தாலிய ஓபெரா வழியாக சிட்னி நகரில் உணர்த்தும் 'பப்லி' ப்ரெட்டி Zன்டா! Sophisticated காதல் ஜல்லி... சரி, சரி, போய்க்கிட்டே இரு!

மற்ற இரண்டும் நல்ல படங்கள். அவற்றைப் பற்றி அடுத்த பதிவுகளில் எழுத உத்தேசம். ஒன்று பீட்டரில்; மற்றொன்று செம்மொழியில். (அப்பதானே ரெண்டு ப்ளாகுக்கும் வியாபாரம் நடக்கும்...)

அதற்கு முன் ஒரு ஐfஓன் சாகசத்தைப் பற்றி...

Comments