உயிரின் மதிப்பு?

கடந்த சில பல நாட்களாக (வாரங்களாக!) நடந்த உலக நடப்புகளில் உயிரின் மதிப்பை ஒட்டி நடந்த சில நிகழ்வுகள் பற்றிய பார்வை:

முதலில் பாஸிடிவ் செய்தி:


Trapped miner Edison Pena arrives at Copiapo hospital for a full checkup after he was rescued from the San Jose mine October 13, 2010. REUTERS/Mariana Bazo* 33 சிலே சுரங்கத் தொழிலாளிகள் 69 நாட்கள் தரைக்கு அரை கிலோமீட்டருக்குக் கீழ் சிக்கித் தவித்து வெறும் சாக்லேட் பானம் அருந்தி, கொஞ்சூண்டு பிஸ்கெட் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து, ஆஸ்பிரின் சாப்பிட்டு, கடைசியில் ஓக்லீ கூலிங் கிளாஸ் அணிந்து வெளியே வந்த போது, மனித உயிரின் மதிப்பை அறிய முடிந்தது. 

முக்கியமாக நாசா அணியினர் வடிவமைத்து அளித்த அந்த ஸ்பெஷல் வண்டி! சந்திரனுக்கு விட்ட(விடப் போகும்) நூறு ராக்கெட்டுக்குச் சமம்!

(ஆமா! கோல் இண்டியா IPOவுக்கு அப்ளிகேஷன் போட்டாச்சா?)


* ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீனவப்பிடி சம்பவத்தைப் பார்த்தால்...

நம் தென்கிழக்குக் கடலோர மாவட்டங்களிலிருந்து சாண் வயிற்றுக்காக கடலில் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மக்களை, இலங்கை கடற்படை 'டேய், இன்னிக்கு செவ்வாய்க்கிழமை! வா! போய் கொஞ்சம் தமிழ் நாட்டு மீனவர்களைப் பிடித்து வைத்து விளையாடலாம்!" என்று ஏதோ வஞ்சிரம் பிடிப்பது போலக் கைப்பற்றி, படகை உடைத்து, வலையைக் கிழித்து, மொத்தத்தில் அக்கிரமம் செய்தது குறித்து அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டு, அம்மக்கள் மாக்களாக பத்து நாட்கள் கழித்து பதைபதைக்கும் குடும்பத்தை அடைந்தது கனமாக மனதில் நிழலாட, மனித உயிரின் மதிப்பற்றதன்மையை அறிய முடிந்தது.



* துரித உணவகத்தில் உண்டால் துரிதமாக மருத்துவமனைக்கும் பின்னர் அதைவிடத் துரிதமாக நம்மைப் படைத்தவனையும் பார்த்து விடுவீர்கள் என்று நம் பாட்டி முதல் நேற்று வந்த மால்கம் ஸ்பர்லாக் (Malcolm Spurlock - Super Size Me)வரை எல்லோரும் கதறித் தீர்த்துவிட்டார்கள்.

இப்போது அதைத் தூக்கிஅடிக்கும் விதமாக மெக்டோனல்ட்ஸில் வாங்கிய ஒரு பர்கர் (இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கிடையே வட்ட வடிவ மாமிசத் தட்டு!) கடந்த - அதிகமில்லை ஜெண்டில்மேன், ஆறு மாதங்களாக அப்படியே இருக்கிறதாம். 'ஙே!'

ஒரு புழு பூச்சி காளான் எதுவும் அண்டவில்லை என்றும், முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாடை கூட அடிக்கவில்லை என்றும் இந்த கலைப்பணியை (?) செய்துள்ள அம்மையார் தெரிவித்துள்ளார்.

இத்தகைய உணவு வகைகளைச் சாப்பிட்ட பின் அதை செரித்து வெளியே தள்ளும் நம் குடல் நிஜமாகவே 'கல்க்குடல்' தான்! முன்னொரு காலத்தில் மேலே சொன்ன அதே பாட்டி, 'சின்னப்பசங்க நீங்க, எதைத் தின்னாலும் செரிக்கணும்!'னு சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

நம் உயிருக்குக் கண்டிப்பாக மதிப்பே இல்லை :-))

எந்திரன் புயல் இன்னும் முடியவில்லை என்றும், அந்தப் புயலே பிலிப்பைன்ஸ் நாட்டை மெகி என்ற பெயருடன் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி.  - கண்டிப்பாக நம்ம சன் டிவி ஸக்ஸ் சொல்லலீங்க!


உயிரா? அப்பிடின்னா?

Comments