மன்மதன் அம்பு கதை!


For the English one, you can go here.


டாக்டர் மன்னார் (கமல்) கைதேர்ந்த கில்லாடி. எதில்? பெண்களை வசியப் படுத்துவதில். அவருடைய பேஷன்டுகள்(?) "ஸார்! எப்படி இந்தப் பெண்ணை ப்ராக்கெட் போடுவது?' போன்ற அதி முக்கியமான பிரச்சினைகளுடன் அணுக, நம்ப மன்னாரு, 'பலானது பலானது செய்ஞ்சின்னா, பலானது, பலானது நடக்கும்' என்று அறிவுரை கொடுக்க, அவர்கள் அதைக் கடைபிடித்தால் வெற்றி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.


இப்படி இருக்கையில் திரு மாதவன் (கேரக்டர் பேர் தெலியேது :-() சினிமா நடிகை திரிஷாவுக்கு லைன் போட முற்பட, அந்த லைன் படு கோணலாக ஆகிவிட, அவர் டாக்டர் மன்னாரிடம் தஞ்சமடைய, இது வழக்கமான கமல்-ரவிக்குமார்-கிரேஸி(?) காம்பினேஷன் என்பது தெள்ளத் தெளிவாகும்.

நடுநடுவே கதைக்களன் கடலுக்குச் சென்று அதி நவீன சொகுசுக்கப்பலில் ஐரோப்பாவைச் சுற்றி வர... (பின்ன, கறுப்பெல்லாம் வெள்ளையாக வேண்டாமா? கமல் கூட 'ரொம்ப செலவாகும் உதய்! வேணும்னா சிங்கப்பூரிலே போயி பத்து நாள்ல முடிச்சிடலாம்னு சொல்ல, அதுக்கு வாரிசு 'அதெல்லாம் வேண்டாம், ரிச்சா செய்யலாம்'னு சொன்னதாக வாரிசே ஒரு பேட்டியில சொன்னாரு!)

முடிக்கிறதுக்கு முன்னாடி:

1. இந்தக் கதை நம்ம சிங்கை செய்தித்தாள்களில் ஆடியோ ரிலீசுக்குப் பின்னால் அவுட்லைன் குடுத்து இருந்தாங்களா... அதிலே கொஞ்சம் மசாலா சேர்த்து... ஹி ஹி...


2. இந்த மாதிரிப் படம் எங்கேயோ பார்த்து இருக்கோமேன்னு நீங்க நினைத்தால்... Check out for 'Hitch'...

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!!
 
கமல் இதை நன்றாகவே கடைபிடிக்கிறார் - ஆனா, HITCH கலையா, இல்லை செல்வமா என்று தெரியவில்லை?

Comments

  1. இன்னாத்துக்கு இவ்ளோ டீடெய்லு . . .
    கதை . . . கமல்னு டைட்டில் போடும்போதே
    தெரிஞ்சிடுச்சே மன்மதன் அம்பு சுட்டபொருள்னு . . .

    ReplyDelete
  2. ம்ம்ம்... நெஜம்மாவே இதை சினிமாவா எடுக்கலாம் போல இருக்கே....

    ReplyDelete

Post a Comment