மன்மதன் அம்பு: புயலில் சிக்கிய காகிதக் கப்பல்!

முதலில் மன்னிப்பு. கதை - Hitch படத்தைத் தழுவியது என்று எழுதியிருந்தேன். இல்லை - Romance on the High Seas என்ற படத்தின் தொள தொள பிட்டிங்.

For an English review visit here.

கமல் உஷார் பார்ட்டிதான். சிங்கப்பூரில் கதை கேட்டவுடன் வேறு பக்கம் திசை திருப்பி விட்டது போலத் தோன்றுகிறது.

மதனும் (மாதவன்) அம்புஜாக்ஷி என்கிற அம்பு என்கிற நிஷாவும் (த்ரிஷா) ரொம்ப லவ்ஸ். அம்பு ஒரு சினிமா நடிகை. சூர்யாவுடன் அம்மணி ஆடும் டூயட்டைப் பார்த்து சந்தேகப் பேயாக மாறி மதன் அவரைப் புண்படுத்த அம்பு காயமடைந்த காதல் மனத்துடன் தூணியை விட்டுச் சென்றுவிடுகிறார்.

அங்கே கட் பண்றோம்.

மூணு வருஷம் கழித்து, இன்னும் காதலை மறக்க முடியாமல், தோழி தீபாவுடன் (சங்கீதா) ஐரோப்பிய விடுமுறைக்குச் செல்லும் அம்புவை வேவு பார்க்க மேஜர் ராஜமன்னார் என்கிற மன்னாரை (கமல்) மதன் நியமிக்கிறார். புற்று நோயால் அவதிப்படும் தன் நண்பன் ராஜனுக்கு (மொட்டை ரமேஷ் அரவிந்த்) வைத்தியம் பார்க்க மேஜருக்கு மேஜராக பண முடை. பணம் அதிகம் தேவைப்பட, இல்லாத அம்புவின் காதலனாக தன்னையே உருவகமாக்கி, மதனை தண்ணி பார்ட்டி ஆக்கி, கடைசியில் கிரேசி மோகன் கிளைமாக்ஸ் மாதிரி எதையோ இடித்துச் சொதப்பி... வரலட்சுமி அம்மா!!


இனி பிடித்த எட்டு:

1. ஐரோப்பிய நாடுகள் + கடல்களை படிகம் போலப் படம் பிடித்துக் காட்டிய மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு.
2. நீல வானம் என்ற அந்த பின்னோக்கிச் செல்லும் அருமையான பாடல் + தலை சிறந்த ஒளிப்பதிவு. அதுவும், எல்லா நிகழ்ச்சிகளும் அசைவுகளும் பின்னோக்கிச் செல்லும் போது, பாட்டுக்கான உதட்டசைவு மற்றும் முன்னோக்கிச் செல்வது டாப்! (Just to show off: The idea is from Enigma's Return to Innocence song!)
3. கமலின் வசனங்கள். "நேர்மையானவர்களுக்கு திமிர்தான் வேலி; யாராலும் அதைத் தாண்டி வரமுடியாது"; வரலட்சுமியை வேண்டி எழுதிய அந்த சர்ச்சைக்குரிய கவிதையை விட 'கண்ணெல்லாம்' என்ற கவிதை நன்றாக இருந்தது.

4. த்ரிஷாவின் நடிப்பு மற்றும் எந்த உடையிலும் எழிலுடன் இருந்த பாங்கு.
5. சங்கீதாவின் மிக இயல்பான நடிப்பு. அதுவும் அந்த 'Good seats are already taken' வசனம் இயல்பின் உச்சி.
6. அவரின் குழந்தைகளாக வரும் அந்த வாண்டுகள் (ரவிக்குமாரின் குழந்தைகள்??) - வயதுக்கு மீறிய சில பல வசனங்கள் பேசினாலும்... Delightful!
7. கடைசி அரை மணி நேரம் வரை அமைதியான ஆற்றின் ஓட்டத்தைப் போல ஒடிய திரைக்கதை
8. ஒய்யாலே பாட்டுக்கு கௌரவ ஆட்டம் போட்ட சூர்யா!



பிடிக்காத எட்டு:

1. பல இடங்களில் இளித்த லைவ் ரெகார்டிங். முடியலேன்னா விட்டு விட வேண்டியது தானே! விருமாண்டியிலிருந்து பல படங்களில் இது உதைத்திருக்கிறது.
2. வழக்கம் போல கமலின் குழப்பம் - இது காதல் படமா? காமெடிப் படமா?
3. இசை - DSP absent.
4. இன்டெர்வலின் போது, குடும்பத்திடம் '(சாப்பிட) என்ன வேண்டும்?' என்று கேட்டவுடன் வந்த பதில்: கொஞ்சம் படம் வேகமாகப் போக வேண்டும் என்று பதில் வந்தது. சில இடங்களில் படம் 'பூட்டாத பூட்டுக்கள்' அளவுக்கு ஸ்லோ!
5. தேவையில்லாத இடங்களில் கமலின் போதனைகள்: 'நான் புத்தி மானா என்னன்னு தெரியாது! என்னப் போயி பக்திமான்னு சொன்னா?", "அகிம்சைதான் பெரிய வீரம்; அது தெரிஞ்சு இருந்தா நான் யாரையும் கொன்னுருக்க மாட்டேன்"...
6. அளவுக்கு மீறிய டாய்லெட் நகைச்சுவை! அதுவும் மாதவன் தொலைபேசியை டாய்லெட்டிலேயே போட்டு விடுகிறார் :-((

7. அந்த கிளைமாக்ஸ்! அது வரைக்கும் மூளைக்கு வேலை கொடுத்தது போதும் என்று கமல் எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை!
8. படத்துக்காக வேஸ்ட்டான $13 x 4 + பாப் கார்ன் + தண்ணி செலவு!

மொத்தத்தில், ஒரு இயல்பான காதல் கதையைக் கொடுக்க எண்ணிய கமல் பாதியில் பயந்து நெளிந்து.... ஹ்ம்ம்ம்...

விரைவில் கலைஞர் டிவியில் 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...' என்று மன்மதன் அம்பு ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.7

Comments

  1. அத்தெல்லாம் சர்தான்...பலான பலான கவுஜ..அதான்பா கயட்டி வுடப்போறோன்னு இஸ்டேட்மெண்டு உட்டுகினாரே..அது பயாஸ்கோப்புல கீதா அல்லாங்காட்டி சொம்மா இஸ்டண்டா? ரெண்டு தபா வர்துன்னு எங்கியோ பட்சமாரி கீதே...

    ReplyDelete
  2. சுருக் விமர்சனம்...
    ரிவர்ஸபில் சாங் எனிக்மாவினுடையதைப் பார்த்ததில்லை... கோல்ட்ப்ளே பாடல் ஒன்று உண்டு... The Scientist அதிலிருந்து அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டிருக்கிறது நீ, நீலவானம் பாடல்!!

    ReplyDelete
  3. நன்றி ஆதவா மற்றும் அனானி.

    @ஆதவா: கோல்ட்ப்லேவுக்கு முன்னால் எனிக்மா, ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்னால் இந்த முறையைப் பயன்படுத்தி உள்ளார்கள். வீடியோ லின்க் பதிவிலேயே இருக்கிறது :-) அதற்கு முன்னால் எவரேனும் பயன்படுத்தியிருக்கலாம் :-)))

    @அனானி: நீங்கள் கவுச்சி பாடலைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது சிங்கையில் அப்படியே ஒளிபரப்பப்பட்டது. படத்தின் நடுவே மற்றும் இறுதியில். படிக்கும்போது என்னவோ போல இருந்த வரிகள் திரையில் பார்த்துக் கேட்கும்போது பரவாயில்லை...

    ReplyDelete

Post a Comment