If you can't read Tamil, here are the Wishes in English!
2010ல்...
- 'எரிமலை எப்படிப் பொறுக்கும்?' என்று விவேக் சிங்கமாக விடைத்தது நன்றாக இருந்ததென்றால், எய்யாப்யாட்ல்லயோகுல் குமுறித் தீர்த்து கொஞ்ச நாட்களுக்கு எங்கெங்கு காணினும் சாம்பலடா! அதையும் தாண்டிப் புனிதமாக பல முறை பூமியன்னை, 'நீங்கள் செய்கிற அட்டூழியம் தாங்கவில்லை' என்று அதிர....
- ஆ ராசாவின் ஊழல் எண்ணுக்குப் பின்னால் வரும் பூஜ்யங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை என்று எல்லோரும் கும்மியடித்துக் கொண்டிருக்கும் போது, இந்தி கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் ஒரு கோடி வென்ற ராஹத் தஸ்லீம் புண்ணுக்கு ஒரு மயிலிறகு!
- மிஷ்கின் போன்றோர் 'ரெமி மார்ட்டின், சரோஜா தேவி' என்று வாபு, மாபு செய்தாலும், இலக்கியம் என்றாலே வேப்பங்காய் என்று ஓடும் சமூகத்தை, 'நில்லுங்கள் ராசாவே!' (இது வேற ராசா!) என்று கடிவாளம் போட்டு, தென்னமெரிக்கா, பிரான்ஸ், பின் நவீனத்துவம் என்று சாரு, எஸ்ரா, மனுஷ்யபுத்திரன் போன்றோர் அறிமுகப்படுத்த முயலுவது ஆறுதல்!
- சச்சின் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து கருப்பு வசியம் செய்து ரிக்கி பாண்டிங்கின் கை விரல், மன உறுதி இத்யாதிகளை உடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியது கிரிக்கெட் ரசிகனின் வருத்தத்தின் உச்சி என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் IPL3 மற்றும் CLT20 இரண்டையும் வென்றது ராயபுரம் ஏகாம்பரத்தின் வயிற்றில் பீர் வார்த்தது.
- ஏகாம்பரம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'எந்திரன்'. என்னதான் தமிழ்த் (இந்தியத்?) திரைப்பட வரலாற்றில் பல 'முதல்'களைப் பெற்றிருந்தாலும், மைனா, களவாணி, பாஸ் போன்ற படங்களே மனதில் நின்றன என்பது நம் ரசனை இன்னும் மரத்துப் போகவில்லை என்பதற்குச் சான்று!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்தக் 'காடுகள்' ஆண்டில், வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்துப் பேணுவோம்!
Comments
Post a Comment