##########
தனம்: யோவ்! இன்னாய்யா?
தனக்குத்தானே சிரிச்சுக்கினு கீறே?
ஏகாம்பரம்: தனம்! இங்க வாயேன்!
நம்ம
சிகா
இன்னாமா டமாஸா பேசிக்கீது
பாக்குறியா?
தனம்: அய்யே! அதான் எப்பவும் நக்கலா
பேசுமே! இப்போ இன்னா ஆச்சு?
ஏகாம்பரம்: அது
இல்லம்மே! பராசக்தி ஆடியோ விளாவுல
அத்தோட
டைரிடக்கரு சுதா பொங்கரா…
தனம்:யோவ்! அது கொங்கராய்யா!
கொல்டி
பொண்ணு
அது!
ஏகாம்பரம்: சரி!
எத்தோ
ஒண்ணு! அந்த பொம்பள சூட்டிங்குலே
நம்ம
சிகாவாண்ட ஒரேயடியா பீட்டர்லே புலுத்திச்சாம்! நம்ம புள்ளையும்
‘அம்மா
தாயி! எனுக்கு இம்மா இங்க்லீபிசு
வராது! அதுனாலே தமிள்லியே சொல்லு!’ன்னு
சொன்னாங்காட்டியும், அது தமிள்லே
பேசுச்சாம்! ஒரே டமாசுதான்!
தனம்:அப்டியா? சரி, பராசக்தி என்னா
மேரி
படம்?
ஏகாம்பரம்: அ…
அது
தெரியாதா? நான் தம்மாத்தூண்டு
கொளந்தையா இருந்தப்போ நம்ம கலீஞ்சரு
ரயில்லே தல குட்த்து
‘இந்தி
ஒளிக! இந்தியைத் திணிக்காதே!’ன்னு
போராட்டம் நடத்துனது பத்தின படம்.
தனம்: உனுக்கு எப்டி தெரியும்?
ஏகாம்பரம்: சும்மாவா! நானே டிரெயிலரை பத்து
தபா
பார்த்திருப்பேன்! தனம்! உனுக்கு
ஒண்ணு
தெரியுமா? நம்ம ஜனநாயகன் டிரெயிலரவுட
நெறைய
ஜனம்
பராசக்தி டிரெயிலர கண்டுக்கினாங்க
தெரியுமா?
தனம்: க்கும்! இப்டி உருப்படாத விசயம்
அல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கோ!
முக்கியமானத கோட்டை விட்டுடு!
ஏகாம்பரம்: இன்னாத்த கோட்டை வுட்டுட்டேன்?
தனம்: யோவ்! அது மொளி பிரச்சினை
பத்துன
படம். அதுவும் மொளியத் திணிக்காதேன்னு சொல்ற படம். அத்தோட
டைரக்டரே தமிள்லே பேசாத இங்கிலீஷ்லியே பேசிச்சுன்னா எப்புடீன்றதத்தான்
தம்பி
கன்னு
🔫 கணக்கா ஊசியிலே
வாழப்பழம் ஏத்திட்டாப்பல!
ஏகாம்பரம்: தனம், அது வாழப்பழத்துலே
ஊசி…
தனம்: இதுலே
ஒண்ணியும் கொறச்சல் இல்ல! பொங்கல்
இனாம்
3000 தராங்களாம். அத்த வாங்கிக்கினு
வா!
ஏதாவது
டகுல்பாஜி பண்ணுன, டிரம்பாண்ட உட்ருவேன், அவன் டவுசர கள்ட்டிருவான்!
##########
Parasakthi (Tamil) is evidently about the anti–Hindi
imposition agitations of the 1960s. The current ruling party in Tamil Nadu, the
DMK, came to power in 1967 on the back of these agitations. Ever since, the
anti-Hindi stance has been a cornerstone of Dravidian politics, though Hindi
has flourished through the Dakshina Bharat Hindi Prachar Sabha, enabling
thousands to learn the language, not to mention the numerous schools, including
those run by several DMK seniors.
As the wag says, there is no need to impose the language. The heavy
influx of non-Tamils into all corners of Tamil Nadu is enough to ensure
that! But then, they speak better Tamil than the natives. Tough life! 👳
##########
PS: In the video, Sivakarthikeyan explains about his struggle to
understand Director Sudha Kongara who used to explain the scenes in
‘Shakespearean’ English and how he had to request her to speak in Tamil. Irony
died.
Comments
Post a Comment