பொன்னியின் செல்வன் – 2: ஐந்தும் ஐந்தும் பத்து!



(TL;DR – Ponniyin Selvan 2 brings a fabulous end to the saga. To bring a novel that is wandering – almost akin to the River Ponni, to screen in a thoroughly engaging manner without losing much of the spirit of the work is something that Mani Ratnam and his team can be proud of. Excellent job done! For the detractors, you can watch Guardians of Galaxy or Kisi Ka Bhai Kisi Ki Jaan. 😆)


For an English review, check here...





1. இளையோர் சூடார் (#செவ்வாய்_செந்தமிழ்; புறநானூறு 242) யாருக்காக, எங்கு படத்தில் இடப்பட்டது என்பது
அருமையான
மணிரத்னம் டச்!
2. நந்தினி-ஆதித்தன் காட்சியில் (வசனங்களின் சொதப்பல் இருப்பினும்) இருந்த ஒரு டென்ஷனை மீன் பொறித்த கத்தி கொண்டே வெட்டி இருக்கலாம்!
3. கார்த்தி சபையில் கட்டுண்டு இருக்கும் அக்காட்சியில் அருள்மொழி வர்மனைப் பார்த்து ‘நானில்லை!’ என அந்த ஒரு சின்ன தலையாட்டல்! அந்த சீனில் கார்த்தி செம, செம!
4. உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பினைக் கண்ணின் வழியே அழகின் வழியால் அனைத்தையும் எரிக்கும் நந்தினியாக நம்ம ஐஸூ! அவர் முடிவிலும் மணியின் டச் நைஸ்!
5. ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசுக்கு ரம்யமான, க்ளீனா ஒரு லவ் சீன்: கார்த்தி-திரிஷா-காவிரி ஆறு-சின்னத் தீவு-நறுக் வசனம்-கலக்கல் BGM… ரொம்ப ஷோக்கா இருந்துச்சு!
1. தெய்வத்திருமகளில் விக்ரம் மகளாக ஒரு குட்டிப் பெண் நடிச்சிருக்கும். அந்தப் பெண் பொசே2ல் இளம் விக்ரமின் இளம் நந்தினியாக நடிக்க… வாங்க சீயான்! நீங்களும் ஜோதியில் ஐக்கியம் ஆகிடுங்க!
2. மாறுவேஷம் எப்படிடா கண்டுபுடிச்சேன்னு ஜெயராம் கேட்க, கார்த்தி, ‘உங்க தொப்பை காட்டிடுச்சி! புளியோதரை வாசம் காட்டிடுச்சி!’ன்னு லந்து கொடுக்கும் போது வைகைப்புயலின் ’போக்கிரி’ கொண்டை ஞாபகம்!
3. அது என்னமோ தெரியலே! பிரகாஷ்ராஜ் தன்னோட லவ்வு பத்திப் பேசும்போது எல்லாம் மல்லாக்கப் படுத்துக்கிட்டு aerial shotலே புலம்பறாரு! ஒரே இருவர் vibes மச்சி!
4. எல்லாம் ஓகே! ஆனா, அது என்ன? யாரு இலங்கைக்குப் போனாலும் ஒரே பொண்ணு பின்னாடியே போறாங்க? பாவம்பா அந்த பொண்ணு!
5. ஆதித்தன் கடம்பூரிலே பெருசுங்க கிட்டே பேசுறது, நந்தினிகிட்டே பேசுறது இப்படி நிறைய சீன்லே வசனம் சிக்சர் அடிச்சிருக்கணும்! ஆனா எல்லாம் இந்த வருஷ ரோஹித் சர்மா மாதிரி நோ ஹிட்டு! ஜெமோவுக்கு ஜுரமோ?

மொத்தத்தில்...

தியேட்டரில் ஓடுகிறதென்றால் சென்று பாருங்கள்.

இல்லை, ‘எனக்கு மணிரத்னம் பிடிக்காது; ரஹ்மான் பிடிக்காது; கார்த்தியும் அவர் குடும்பமும் பிடிக்காது; திரிஷா வேஸ்ட்டு; ஐஷுக்கு வயசாயிடுச்சு; பிரகாஷ் ராஜ் kuch bhi; தியேட்டர் காரன் பாப்கார்ன் கொள்ளை அடிக்கிறான்;’ அப்படின்னு சொல்ற மக்களே!
உங்களுக்காக இருக்கவே இருக்கு OTT! கொஞ்ச நாள் கழித்துப் பாருங்க. Rewind பண்ணிப் பண்ணி இன்னும் குறை சொல்லலாம்!
ஐந்து பாகம். ஐந்து வருஷம் வாரப் பத்திரிக்கையில் வளைச்சு வளைச்சு எழுதினது பொன்னியின் செல்வன். பத்திரிக்கையின் சர்க்குலேஷன் குறைஞ்சதுன்னா கொஞ்சம் சஸ்பென்ஸ் தூக்கி, வந்தியத்தேவனை ஏற்றி விட்டு, நந்தினியின் சதியைக் கூட்டி இப்படி எல்லாம் கல்கி எழுதினார். எய்தாப்புகழும் எட்டி விட்டார்!
அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை ஐந்து மணி நேரப் படமாகச் சுருக்கி, சுவாரசியம் தட்டாமல், கதையின் மூலம் கெடாமல் (கடைசி ட்விஸ்ட்க்கு கல்கியே தலைகீழாக நின்று யோசித்ததாக அவர் மகனும் மகளும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளனர்), இன்றைய ஒரு நிமிட ரீல்ஸ்களையே முழுக்கப் பார்க்காமல் swipe செய்யும் ஜனங்களை உட்கார வைத்து, ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சரித்திரத்தின் மீது நாட்டம் வர வைத்ததற்கு மணிக்கும் அவர் குழுவினருக்கும் ஒரு சல்யூட்.

⭐️⭐️⭐️⭐️

#PonniyinSelvan2 #sriGINthoughts #Tamil #review

Comments