Four movies. Four Languages. Four moods. Mixed returns.
(Yes, no Tamil movies 😉)
#sriGINthoughts #reviews #செவ்வாய்_செந்தமிழ்
(Yes, no Tamil movies 😉)
#sriGINthoughts #reviews #செவ்வாய்_செந்தமிழ்
#Vash_Level_2 #Gujarati #Netflix #Horror ⭐️ ⭐️ ⭐️
Pay your dues properly, even if it's 10 rupees; or face supernatural debt recovery.
டீக்கடையில் குடித்த தேநீருக்கு
பத்து ரூபாய் தர மறந்தீரா? கெட்டது குடி!
ஒரு டஜன் ஆண்டுகள்
உம் மகள் தன்னை மறந்து ஜடமாய்,
மாறாப் பேய்ப் புன்னகையுடன்
சக்கர நாற்காலியில் அசையாதிருப்பாள்!
---
குஜராத்தி மொழியில், தேநீர்க்கடன் பற்றி,
ஒரு சமூகமே பல்லாண்டுகள்
ஒருவர் சொல்லுக்கு வசியம் ஆவது பற்றி...
எதையோ குறிக்கிறதோ இந்த
வஷ் லெவல் 2? :-)
#வசியம்_அவசியம்
#Elumale #Kannada #Zee5 #Thriller ⭐️⭐️⭐️
தமிழும் கன்னடமும் காதலிக்க... (ஆம்வா!)
வீரப்பன் மீசை வெட்டி கானகம் தாண்டி வர... (ஆத்தா!)
போலீஸ் அராஜகம் தலைவிரித்தாட... (இது பழசு!)
திடீரென சந்தனக்காரர்கள் நல்ல படங்கள் அளிக்க... (அட!)
ஓரிரவில் உதிரும் கதை…
கொஞ்சம் உயரவே நிற்கிறது ஏழுமலை!
#காதல்_கொத்து
#Mirage #Malayalam #Einthusan #Thriller ⭐️⭐️✨
Every day is not a Drishyam day, Jeethu. So many twists, I am looking for a chiropractor.
த்ரிஷ்யம் கொடுத்த ஜீதுவின் படமா?
நன்னாயிட்டு இருக்கும் என அமர்ந்தோம்.
திருப்பு! திருப்பு! என திருப்பித் திருப்பி…
திருதிருவெனத் திரிந்ததுதான் மிச்சம்!
படத்தின் வெற்றியும்
தலைப்பைப் போலவே கானல் நீரோ?
மலையாள அலம்பல் கொஞ்சம் அதிகம்தான்!
#பசுமை_பாலைவனம்
#OG #Telugu #Netflix #Action ⭐️⭐️
Imagine Coolie meets Thug Life meets full-tilt Tollywood — a chaotic kichadi served by Andhra’s Deputy PM, no less. John Wick has gone into hiding.
ஓராயிரம் வெட்டரிவாள். ஈராயிரம் துப்பாக்கிகள். மூவாயிரம் அடியாட்கள்!
அனைத்தையும் ஒரே சமுராய் வாளுடன்
எதிர் கொள்வார் நம் ஆந்திரத் துணை முதல்வர்!
அதிலும் சாகாதவர்
அவர்தம் ஜப்பானிய மொழி கேட்டுத்
தற்கொலை புரிய…
ஓஜஸ் கம்பீராவிடம் ஜான் விக் பிச்சை எடுக்க வேண்டும்.
#ஓஜி_போங்குஜி



Idhu chennagide 👌👌
ReplyDelete