கிரிக்கெட்டும் பாண்டி விளையாட்டும்...




கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு ...

அதனால, ஐபிஎல் ஜுரம் எல்லாருக்கும் இருக்கும் இந்த சுப யோக சுப வேளையில் ஒரு 'பசங்க' ஸ்டைல் நினைவலைகள்...


நம்ம ஆபிசிலே ஒரு புது தல வந்திருக்காரு...

'ஐயா, நீங்க எந்த ஊருன்னு' கேட்டா பட்டுன்னு 'மதுரை ஒண்ணு' அப்பிடின்னு பதில் வரும்... அது என்ன 'மதுரை ஒண்ணு?'

'அது ஒண்ணும் இல்லிங்க, எல்லா பயலுகளும், மதுரைன்னாலே எந்த பட்டின்னு கேக்கறாய்ங்க! அதுக்காகத்தான்..'


இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்கும் போது அந்த இடத்துல கலகலப்புக்கு என்ன குறைச்சல் இருக்கும்? அதுவும் ஒரு நாள் முழுக்க சுவிஸ் நாட்டுல மேட்டர் பார்க்க (சாரி, மேட்டர்ஹார்ன் பார்க்க ;-) கூடவே அழச்சிட்டு போனா... ஒரே ரணகளம்தான்...

ஆங்... பார்ட்டியோட பேரு... சரி, பாண்டின்னு வச்சிக்கலாம்.
பாண்டி நம்மகிட்ட அன்னிக்கு எவ்வளவோ விஷயம் சொல்லி இருந்தாலும், அவரு மதுரயில கிரிக்கெட் விளையாடினது பத்தி சொன்ன ரெண்டு மூணு கலக்கல இப்ப நினைச்சாலும் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது...


நம்ம பாண்டியோட இளமைக் காலத்துல, கிரிக்கெட் யார்கூட வேணும்னாலும் விளையாடுவாங்க போல..தெருவுல போற மண்ணெண்ணை (எத்தனை ண?) வண்டிக்காரங்க தான் அந்த காலத்து சேவாக், தோணி எல்லாம்..
தெருக்கூத்துல பீமசேனன் கதாயுதம் சுத்தற மாதிரி, மட்டையை சுற்ற வேண்டியது...

அனுமார் கடலைத் தாண்டுன மாதிரி, தாவித் தாவி பந்து பிடிச்சது - ஆனா லட்டு மாதிரி காட்ச் வந்தா மட்டும் விட்டிடுவோம் (எலே, கண்ணுல மண்ணு விளுந்திருச்சி!)
கத்தி, பாணா, காடா - இப்படி இன்னித்து T20க்கு அன்னிக்கே அச்சாரம் போட்டது அந்த காலத்து வயக்காட்டு மட்டையடிதாங்க!

மேல பாண்டி சொல்றத கேப்போம்...


நம்ம பயலுங்க ரொம்ப மானஸ்தனுங்க... அம்பயர் கையத் தூக்கிட்டா, அவுட்டோ இல்லியோ சத்தியத்துக்கு கட்டுப்பட்டு உடனே வெளிய வந்திருவாங்க...

ஆனாலும் இந்த அம்பயருங்க பண்ற அழுகாணி இருக்கு பாருங்க, ரொம்ப மோசங்க...(பாண்டி, நம்ம தொழிலயே இப்படி கவுக்குறியே!)

இப்பிடித்தாங்க, ஒரு வட்டம் மேட்ச் ரொம்ப சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு... நம்ம டீம் பேட்டிங் பண்ணிட்டிருக்கு... நான் ரன்னர் சைடுலே நின்னுகிட்டிருக்கேன்...
திடீர்னு, போலர் போட்ட பந்து நம்ம பங்காளி கால்ல பட்டிடுச்சி. ஒரே கூச்சல். நம்மாளு அம்பயர பார்த்தான்... அவரு ஆக்காட்டி விரல தலைக்கு மேல தூக்கி விசிறி வீசற மாதிரி ஆட்டவும், அரிச்சந்திரன் மாதிரி, அவுட்டுன்னு நினச்சிக்கிட்டு மரத்தடியப் பாத்து நடக்க ஆரம்பிச்சுட்டான்.
நம்ம எதிராளிங்கல்லாம் ஒரே கும்மாளம்.


நான் ரன்னர் சைடுல நின்னுக்கிட்டு அம்பயர்கிட்ட 'மாப்பிள! அது அவுட்டா?'ன்னு அப்பாவியா கேக்குறேன். அதுக்கு அந்த அழுகாணிப்பய, 'இல்லியே மாப்பிள! அது அவுட்டு இல்லியே! விரல தூக்கி நேராக் காமிச்சாத்தான அவுட்டு, நாந்தான் விரல ஆட்டிக் கிட்டே தான இருந்தேன்! இவிய்ங்க ஏன் இப்பிடி குதிக்கிராய்ங்க?' அப்டீன்னுப்புட்டான்!
அதுக்கப்புறம் என்ன? ஒரே ஸ்டம்புதான், அடிதான்...


இதே மாதிரி, இன்னொரு வட்டம், நம்ம எதிராளிய நம்ம பய அவுட்டு கொடுத்திட்டான். அவ்வளவுதான், அந்த ஆளுக்கு வந்ததே கோவம்... ஓங்கி ஸ்டம்ப ஒரு உதை, குச்சியெல்லாம் பறக்குது...
உடனே, மண்ணெண்ண பார்ட்டிங்களுக்கெல்லாம் ஒரே கடுப்பு.. ஓடிவந்து, 'பாண்டி! நாம தெய்வமா மதிக்கிற ஸ்டம்ப உதைச்சிட்டான்! அவன சும்மா விடக்கூடாது, பாண்டி!' ன்னு அலற ஆரம்பிச்சுட்டாய்ங்க!


டேய்! இதுல தெய்வம் எங்க வந்ததுடான்னு, அப்புறம் அவிய்ங்கள சமாதானப் படுத்தி மேட்சை முடிக்கிறத்துக்குள்ள முழி பிதுங்கிடிச்சி!

Comments

  1. சார், நீங்க ஒரு பதிவு எழுதியே சுமார் அஞ்சு மாசம் ஆச்சு...இதுல எதுக்கு கிரிக்கெட், அரசியல் என்று பிரிவுப்டுத்துரீங்க? சும்மா வுட்டு தள்ளுங்க...காசா பணமா ;-)

    ReplyDelete
  2. வாழ்த்துகள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது

    ReplyDelete

Post a Comment