பாண்டி விளையாட்டு - பி.கு.



போன பதிவைப் படிச்சிட்டு நம்ம பாண்டி சொன்னதாவது:


'ரொம்ப நன்றிங்க - தமிழ்ல எளுதினதுக்கு. ஏன்னா, நம்ம பயலுங்க எப்பவுமே வெவரமானவய்ங்க! ஒரு இங்கிலீஷ் படத்தப் பார்த்துட்டு, பத்து பேரும் பத்து விதமா புதுப் புதுக் கதை சொல்லுவாய்ங்க! இப்ப நீங்க தமிழ்ல் எளுதிட்டீங்க இல்ல, தப்பு வரதுக்கு சான்ஸே இல்ல, பாருங்க!'
ஆனாலும் இந்த மதுரக்காரவய்ங்களுக்கு ரொம்பவே குசும்பு அதிகம். நன்றி சொல்லிட்டு, கூடவே, டேய்! உன் தாய்மொளியில எளுதாம பீட்டர்ல கதை விட்டா அவ்வளவுதான் றத எவ்வளவு அழகா வாழப்பழத்துல பின் குத்தற மாதிரி சொல்லிட்டாரு பாருங்க!


(அப்பாடா! தலைப்பு பி.கு வந்திடுச்சி)

Comments