ஆல் ஈஸ் வெல், சற்றேறக் குறைய!

அன்பு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பதிவுக்கு...

வழக்கம் போல சினிமா விமர்சனம்தான்...

அதற்கு முன் சிங்கையில் டாக்சி அராஜகங்கள் பற்றிப் புலம்பி வாயை மெல்லும் (அரைக்கும்?) மக்கள்ஸுக்கு இன்னும் ஒரு நற்செய்தி:

போன மாதம் சிங்கை விமான நிலையத்திலிருந்து ஜுரோங் செல்ல டாக்சியில் ஏறிய திரு. கொச்சுமாதவனுக்கு ஒரு வல்லிய அதிர்ச்சியாணு... வீடு போய்ச் சேர ஒன்றரை மணி ஆன அவஸ்தை ஒரு புறம் இருக்க, அந்த வாடகை மகிழூந்து மீட்டரில் காட்டிய சார்ஜ் அவரை திரும்பத் திருவனந்தபுரத்துக்கே துரத்தும் வண்ணம் இருந்தது என்பதுதான் உண்மை! எவ்வளவு சார்ஜ்? ரொம்ப கம்மிதான்... $85.26...ஹ்ம்ம்ம்ம்!



ரொம்ப நாள் கழித்து கடந்த மூன்று வாரங்களில் இரண்டு தமிழ்ப்படங்களை தியேட்டரில் பார்க்க முடிந்தது. ஒஸ்தி சென்னை சத்யத்திலும், நண்பன் சிங்கை அங் மோ கியோவிலும்.

இதில என்ன டமாஸுன்னா, ரெண்டும் இந்திப் படத்தோட அட்டக் காப்பி...

ஒஸ்தியில் சிம்புவின் டுமீலுதான் பாட்டில் படுத்துக் கொண்டே குதித்து ஆடும் அந்த ஸ்டெப்பும், சந்தானத்தின் கலாய்த்தலும், ஈஸ்வரியின் கலாசலாவும்தான் எம்மைக் கவர்ந்தன. மற்றெல்லாம் சல்மான் கானின் பின் தொழுது செல்ல வேண்டும் என்பது என் ஒஸ்தியான கருத்து! Of course, நம்ம ரிச்சா, சகல விதமான பரிபாலனங்களோட பானை செஞ்சது கண்டு இன்னமும் வியக்கேன்!


நண்பன்...

3 இடியட்ஸ் படத்தின் ஜெராக்ஸ்தான் என்றாலும், ஷங்கர்/விஜய் கூட்டணி எப்படி இருக்கும் என்ற ஒரு சுவாரசியமான கேள்வியும், வீட்டில் உள்ள விஜய்-விரும்பி டீன் ஏஜ் பெண்ணின் நச்சரிப்பும் நம்மை நேற்று படத்தைப் பார்க்க வைத்தன.

ஷங்கர் SACயின் துணையாக இருந்து வேலை கற்றுக் கொண்டதால்தான் விஜய்க்கு இந்த சான்ஸ் கொடுத்துள்ளார் என்று சில சல்லிகள் பேசியது உண்மைதான்.

ஆனால், இந்தப்படத்தில் விஜய் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். ஆமீர் கானுடன் ஒப்பிடுவது ஏறத்தாழ தவறுதான் என்றாலும், சிலபல காட்சிகளில் (மெஷின் பற்றி விளக்கும் போது, பாடல் காட்சிகள், லைப்ரரியில் சைலன்ஸரை கலாய்க்கும் போது) ஒரிஜினலைவிட சூப்பருங்ணா!.


எந்திரனுக்காக ஷங்கர் எல்லா கற்பனையும் செலவழித்து விட்டார் எனத் தோன்றுகிறது. காட்சிக்கு காட்சி அப்படியே எடுத்திருந்தாலும் (ரீமேக் ஒப்பந்தம் அவரை அப்படி நிர்ப்பந்திருக்கலாம்... சேத்தன் பகத் எப்படி எல்லாம் மாட்டிக் கொண்டு விழித்தார் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்). ஷங்கர் எழுதிய வசனங்களிலேயே அன்னியக் கும்பிபாகம், பாய்ஸ் படக் குசுப்பாடல், சஹானா பாடல் செட் என்று ஒரே deja vu!

ரீமேக் சரிதான். ஒரிஜினலில் குஜராத்தி உணவு பற்றி கரீனா கடிப்பார். அதற்காக சம்பந்தமே இல்லாமல் விஜய்க்கு பர்மா சாப்பாடு பிடிக்கும் என்று நுழைத்து அதற்காக இலியானா கடிக்க... மச்சி, ஐ வாண்ட் த மப்பு, ஓபன் த பாட்டில்!

ஸ்ரீஜித் சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கின்றனர். இலியானா, சத்யராஜ் - ஸாரிங்க ஆபிஸர்!

தமிழுக்காக கொஞ்சூண்டு புதுசாக செய்திருக்கிறார்கள். பாம்பு வந்து முட்டை போட்ட பேப்பரைத் தின்னுவது; அஸ்கு லஸ்கா பாடல், வாத்துப் பண்ணை வைத்துள்ள அப்பா, வசனங்களில் லோக்கல் விளையாட்டு - (ஜீவா: சார், கடைசி செமஸ்டரில் ஒரு பேப்பர் புட்டுகிச்சுன்னா) என்று அரசல் புரசலாக புருவங்கள் உயர்த்தப்படுகின்றன.

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிகமாக இடுப்பு காட்டப்பட்ட பாடல் என்ற சிறப்பை 'இருக்கானா' பாடல் பெற்றுள்ளது என்பது சான்றோரின் தீர்ப்பு! (இதற்காகவே இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்று கூறினால் அது அராத்துத்தனம் ஆகிவிடும் என்பதால்...)

3 இடியட்ஸ் படம் பார்க்கும் போது குறைந்தது மூன்று இடங்களிலாவது இன்றும் என்னையும் அறியாமல் அழுவாச்சி ஆகிவிடும். நான் இத்தனை நாளும் அது நடிப்பினாலும், வசனத்தினாலும் ஏற்பட்ட பாதிப்பு என்று கருதியிருந்தேன். நண்பனைப் பார்த்த பிறகு - அதே இடங்களில் நமக்குக் கண்ணீர் வரவில்லை. யோசித்துப் பார்த்ததில், ஒரு விடயம் புலப்பட்டது. 

பின்னணி இசை. 

ஹாரிஸு... கலச்சிட்டியே பரட்டை! ஒன்றிரண்டு பாடல்கள் சுமார் என்றாலும், BGM தாங்க முடியவில்லை... விளைவு? அழ வைக்க வேண்டிய இடங்களில், 'So what?' என்று கேட்கத் தோன்றுகிறது.

கார்க்கியின் பாடல் வரிகள் (எந்தன் கண் முன்னே, அஸ்கு லஸ்கா) கலக்கல். இளமை வாழ்க!
ஸ்ரீஜித்தின் சத்யனின் அந்த ஆசிரியர் தினப் பேச்சின் ஊடே ஏற்படுத்தப்பட்ட களேபரங்கள் கிச்சுகிச்சு மூட்டினாலும், கலவி என்றால் என்ன, கொங்கை என்றால் என்ன என்று புளி போட்டுத் தேய்த்து, நம்ம மூளை எல்லாம் ஒரே பளப்பளா! அது சரி, கொலவெறிக்கு நடுவே, இப்படியாவது தமிழ் வளர்ப்போம் என்று நினைத்துவிட்டார்களோ? (வரிவிலக்குக்கு இன்னுமொரு காரணம்!)

மற்றபடி, ஆல் ஈஸ் வெல், சற்றேறக் குறைய!

Comments