விஸ்வரூபம் - முன்னோட்டம் (டிரெய்லருக்கு தமிழாமாங்!) பற்றிய நம் தாழ்மையான கருத்து: (கிளிஞ்சுது!)
- கதக் நடன தாளங்களுக்கு இணையாக மெஷின் துப்பாக்கியின் 'டட்டட்டட்'
- நடு வகிடு எடுத்த நளினமான கதக் மாஸ்டர் கமல்
- குண்டு துளைத்தபின் கொப்பளிக்கும் ரத்தத்தின் நுணுக்கம்
- கமலுக்குப் பிடித்த பிளாஸ்திரி மேக்கப்
- ஹைடெக் ட்ரோன் (அதுதாங்க தும்பி!)
- ஆண்டிரியா 'எல்லாருக்கும் இந்தக் கதையில டபுள் ரோல்' என்று சிடுசிடுப்பது...
...வழக்கம் போல ஆர்வத்தைக் கிளப்புகிறது.
கமல் கதையை சிங்கப்பூரில் இதுதான் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஆனால் அதை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான். மன்மதன் அம்பு கதையையும் இப்படித்தான் சிங்கையில் 'அவுட்' செய்தார். ஆனால் சொன்னது ஒன்று திரையில் வந்தது வேறு.
கதக் மாஸ்டர் விஸ்வம் (விஸ்வநாத், விஸ்வேச்வரன், விஸ்வக்சேனன்) எப்படி இந்தியாவின் சிறந்த உளவாளி மற்றும் கமாண்டோக்களில்
(அதுக்கு எதுக்கு அமெரிக்கா போகணும்? அப்பதானே இந்தியா கலையிலும் சரி, கொலையிலும் சரி வல்லரசு என்று காட்ட முடியும்!)
- பூஜா 'நீங்க நல்லவரா? கெட்டவரா?' என்று கேட்பது கொஞ்சம் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.
Some classics are better left untouched.
- அதற்கு கமல் 'I am a hero; I am a villain' என்று உதார் விட்டு டாலர்களை தூக்கி வீசுவது - மங்காத்தா comparison is inevitable and I think that Ajith was fabulous in that 'Money, Money, Money!' scene.
கொசுறு: கமல் Barrie Osborne உடன் பணி புரிய இருப்பாதாக வந்துள்ள செய்திகள் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் இருந்து, உலகளவில் சினிமா முத்திரை படைக்கத் தற்போது தகுதி உடையவர் அவர் ஒருவர்தான்.
கொலவெறி, love anthem, sachin anthem, மூளைக்கு வேலையற்ற மரம் சுற்றும் so-called musicals (யோவ், மேற்கத்திய விமர்சகர்கள் நம்ம படத்தை musicalனு சொல்றது வஞ்சப்புகழ்ச்சி அணி! இது தெரியாம குதிச்சிட்டு இருக்காதீங்க!) இப்படி எவ்வளவோ இருந்தாலும் கொஞ்சமாவது மூளைக்கு வேலை கொடுக்கும்திரைப்படங்களைக் கொடுப்பதற்கு உ.நா மெனக்கெடுவது பேருண்மை. அம்முயற்சிகள் வாழ்க, வளர்க!!
ஏகாம்பரத்தின் பி.கு.: இன்னாதான் கன் பைட்டு குட்த்தாலும், மூஞ்சிலோ பிளாஸ்டர் போட்டுகின்னாலும், பொம்பள மாதிரி டான்ஸ் ஆட்னாலும், சும்மா நச்சுனு கோச்சடையான் வர்றான் பாரு... அது பிகிலு... கோபாலு, இன்னோரு குவார்ட்டரு சொல்லு... அது செரி, கோச்சடையான்னா இன்னாபா?
Review for a trailer? What next? Review for a poster or just the naming itself?
ReplyDelete