தலைப்பைப்
பார்த்து, இது ஏதோ பின் நவீனத்துவ விமரிசனம் என்று நினைத்துவிட வேண்டாம்.
கொஞ்சம்
அறிவு ஜீவிகளை இழுக்க வேண்டிச் செய்யப்பட்ட ஒரு சின்ன டகல்பாஜி!
தன்
முயற்சியில் சற்றும் மனம் தளராத நாம், இன்று மனைவியின் கால் பிடித்து, நண்பர் வழியாக
டிக்கெட் வாங்கி, ரெக்ஸில் நுழைந்தால், கூட்டம் பரவாயில்லை ரகம்.
படம்
ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் கதை தெரிந்துவிடும் என்பதால் அதைப்பற்றி இங்கு வேண்டாம்.
ஏறத்தாழ நாம் கூறிய அதே கதைதான், except for a slight variant in the third bullet – I was
kicking myself for not seeing it coming!
இருப்பினும்,
கமல் படத்துக்குக் கதைக்காக மட்டும் போனால் அது நாம் செய்யும் முதல் தவறு.
படத்துக்குள்
படம் என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் அசந்தாலும் கஷ்டம். ஜிகர்தண்டாவில்
அதைத் திறம்படச் செய்திருந்தார்கள்.
அந்தக்
கத்தி மேல் நடந்து…
- சாகாவரம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளால்தான், மந்திர தந்திரங்களால் இல்லை.
அதை…
- முற்றும் துறந்த ஞானிகள் பெறலாம் அல்லது
- காலத்தால் அழியாத இலக்கியம் படைத்தோர் பெறலாம் அல்லது
- மக்களை மகிழ்விக்கும் கலைஞர் பெறலாம்...
பிடித்த ஆறு:
- கமல் நடிப்பல்ல – கவிதை! அடுத்த வருடத்தின் சிறந்த பாடல்களுக்குரிய தேசிய விருது பெறுவது நிச்சயம்!
- எம்.எஸ்.பாஸ்கர் – அருமையான நடிப்பு – இவரை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணுங்கப்பா!
- அற்புதமான மேக்கப் மற்றும் கலை – மச்சி! ஒப்பனை & art direction!
- இசை – கிப்ரான் நிஜமாகவே கலக்கியிருக்கிறார் – அதுவும் கமலும் அவர் மகனும் பேசும் அந்தக் காட்சியில் அவர் இசையே இல்லாமல் அசத்தியிருப்பது, வாவ்!
- படம் நெடுகிலும் வசனங்களில் பளிச்சிடும் நகைமுரண் (கண்ணு laughable irony!)
- கடைசியாக, அந்த வில்லுப்பாட்டும், நடனங்களும்… அப்பப்பா! பல பாடல்களில் கமல் ஆட வந்ததுமே நடனத்தின் தரம் சட்டென பல மடங்கு உயர்வது so evident!
“இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமே” இரண்டு:
- நடிப்பு - கமல், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் தவிர…ம்ஹூம்!
- எட்டாம் நூற்றாண்டுப் படம் சிறிது அதிக நீளமே என்பது உண்மை
காஞ்சனாவின்
பேயும், ஐயின் சத்தமும், லிங்காவின் அமெச்சூர்த்தனமும் தந்த மூளைக்கட்டிகளுக்கு இது நல்ல
ஒரு சிகிச்சை.
போய்
ஒருமுறை பாருங்கள்.
யோசிப்பீர்கள், எது வாழ்வு, எது மரணம் என்று!
(நீங்க இவன் என்ன சொல்ல வர்றான்னும் யோசிக்கலாம்! ஒண்ணுமே யோசிக்காம மூளையைக் கழட்டி வச்சிட்டு வேலை செய்யுறதுக்கு அப்படியாவது யோசிச்சா பரவாயில்லை இல்லையா? :-))
Oru yelavum puriyala.. Ungalukku manasula kamal nu. Nenappaah??.Neenga critics illa comedian...
ReplyDeleteஅப்ப கமலஹாசனைப் பிடித்தால் படம் பிடிக்குமா ?
ReplyDelete