ஏகாம்பரத்தின் பார்வையில் காலா!





For my views of the same movie in English, please visit here.


அன்புள்ள கபாலிதலைவன் ரஜினிக்கு,

உன்னிய இன்னிக்கும் உசிரா நினைக்கும் ஆர்கே நகர் ஏகாம்பரம் எளுதிக்கிறது…

இன்னா தலீவா, நான் எப்போ ராயபுரத்துலேர்ந்து ஆர்கே நகர் வந்தேன்னு கேக்குறியா?

அது நம்ம ஜெயலலிதாம்மா போனப்புறமே எடம் மாறிட்டேம்பா. இடைத்தேர்தல்லே வேற நல்ல அறுவடைப்பா… நம்ம தினகரு 20 ரூவா கொடுத்தாரா… அதுலே நல்ல துட்டு தேறிச்சு.

சரி, அது கெடக்கட்டும்.

இன்னிக்குத்தான் காலா படம் கண்டுகினேம்பா.

தனலெச்சுமிய வர்றியான்னு கேட்டேன். அது ரொம்ப பிகு பண்ணிகிச்சு. ஏன்னு கேட்டா, ‘கபாலி மாதிரி தூக்கம் வராது இல்லே’ன்னு ஒரே ரவுசு. தலைலே ரெண்டு தட்டி, இட்டுக்கின்னு போனேன். சேகரு பயலும், நம்ம கோவாலும் கூட வந்தானுங்க.

இன்னா கேட்ட தலீவா? சேகரா… நல்ல படிக்கிறான் கண்ணு… பத்தாவது படிக்கிறான். டாக்குடருக்கு படிக்கணுமாம். நம்ம கோபாலுதான் சொன்னான், ஏதோ நீட்டோ இன்னா கருமாந்தரமோ எளுதணுமாம். பாத்து படிடான்னு சொல்லிக்கினேன். நீ கூட நல்லா படிக்கணும்னு சொல்லிக்கினியா... அது என்னாது? கற்றவை பற்றவை - அதெல்லாம் அப்புடியே வர்றதுதான் இல்லே, சபாசு!

ரொம்ப கஸ்டப்பட்டு காலாவுக்கு டிக்கிட்டு வாங்கணும்னு நெனக்க சொல்லோ, ஆல்பட்டுலே காத்து வாங்கிக்கினு இருந்திச்சு. ‘இன்னாடா கோபாலு, ஈ ஓட்டிகினு இருக்காங்கோ’ன்னு கேட்டேன். அவன், ‘எல்லாம் பிசினசு டேட்டிகிஸூ’ன்னு ஏதோ சொன்னாம்பா. ஒண்ணியுமே புரியலே.

ஏதோ மொத நாளு படம் பாக்குறோம்னு ஒரே குஷியிலே வந்துகினோம்.
படம் ஓப்பனிங்கு சூப்பர் தலைவா. நீ கருப்புலே சொம்மா மதுரை வீரன் கணக்கா வந்தப்போ சேகரே விசிலடிச்சான்னா பாத்துக்கோயேன்.

அப்பால தாராவியிலே (எவ்ளோ பெரிய சேரி தலைவா!) நீ ரவுசு வுடறதாகட்டும், பொண்டாட்டிக்கிட்டே லவ்ஸு வுடறது, பழைய டாவை திரும்ப சைட்டு அடிக்கிறது இப்புடியே கலக்கிட்டே…

அதுலியும் தண்ணி அடிச்சிட்டு போலீஸ் டேசன்லே சும்மா சுத்தி சுத்தி அந்த சேட்டு கிட்டே ‘நீ யாரு, நீ யாரு’ன்னு கலாய்க்கிறே பாரு, ஒரே பிகிலுதான்.
கபாலியிலே நீ அதிகமா சண்டையே போட மாட்டியா, ஒரே குஸ்டமா போயிடுச்சு. ஆனா இதுலே செம ஃபைட்டு, நம்ம காலா சேட்டு.

அது சரி, ‘தலைவரு எப்போ சேட்டு ஆனாரு? அதுக்கு வெள்ளையா இருக்கணும் இல்லே?’ அப்புடின்னு நம்ம கோபாலுகிட்டே கேட்டேனா, அவனுக்கு முன்னாடி நம்ம சேகருதான் சொன்னான், பாம்பேயிலே எல்லாம் பெரிய ஆளுங்களே அப்படிதான் கூப்பிடுவாங்களாம். அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

அப்புறம் உன் ஏரியாவுக்குள்ளே அந்த அரி தாதா வந்துட்டு திரும்ப போவச்சொல்லோ ‘என் பெர்மிசன் இல்லாம நீ போவ முடியாது’ன்னு உசார் பத்தினி ரைட் காட்டச் சொல்லோ செம செம!

இன்ட்ரோல்ம்போது தனலெச்சுமிக்கு சம்சா வாங்கி குடுத்தேன். அதுக்கு ஒரே குஷி. செம ஃபைட்டு மாமான்னுச்சு. ‘பாவம் தலைவரு, இவ்ளோ வயசுலியும் என்னமா ஒழக்கிறாரு,’ அப்டின்னு சொல்லவும் எனக்கு கண்ணுலே தண்ணி வந்துச்சு. (அட, சம்சா காரம்பா!)

அப்பாலே நீ வில்லன் ஆளை அடிக்கிறதும், அவன் உன் வீட்டை கொளுத்தறதும், நீ அவன் வீட்டுலே போய் உதார் காட்டுறதும், சேரியிலே ஒரே கலவரம் வர்றதும் – இன்னா படம்னு தெரியலே, ஏதோ படத்துலே பாத்தா மாரியே இருந்திச்சு.

அப்பாலே டிவியை வச்சி வில்லனை கவுக்கறதுகூட என் வூட்டாண்டே ஆயாக்கடைலே வெச்சிருக்கிற முந்தாநாள் வடை கணக்கா இருந்திச்சுப்பா.

அதுனாலேதானான்னு தெரியலே, இந்தியிலியே நீ கூட நெறயா பேசினியா..அப்பகூட சுளுவா புரிஞ்சுச்சு... எவ்ளோ படம் பாத்துருக்கோம்?
ஆனா நீ சோக்குப்பா. செம கெத்து. அந்த கூலிங் கிளாஸு, அந்த நாய், அந்த தோல் செருப்பு, வெள்ளை தாடி, நல்ல கருப்பு டோபா… நெறைய எடத்துலே ஒன் ஆக்டிங்கு கலக்கல்…

கடோசிலே உன்னிய சுடும்போது பக்குனு ஆயிடுச்சி! ஆனா அந்த வெள்ளை தாதாவை கலர் கலரா போட்டுத் தள்ளச் சொல்லோ நீ எல்லா சைடுலேர்ந்து வருவியா, அப்போதான் கொஞ்சம் நிம்மதியாச்சு.

அப்பொறம் கொஞ்சம் கேள்வி தலைவா…

  • நீ இன்னா புத்தர் கும்பிட ஆரம்பிச்சுட்டியா? உன் வூட்டுலே வேற ஒரு சாமி படம் கூட பாக்க முடியலே!

  • அது இன்னாது, நீ நடத்துன கலவரம், பந்ந் எல்லாம் அப்புடியே தூத்துக்குடியிலே நடந்த மாதிரியே இருந்திச்சு? உனுக்கு முன்னாடியே தெரியுமா, தலைவா?

  • ஆனா நீ மட்டும் டிவியிலே பேட்டி குடுக்கும்போது ‘ரவுடிங்க வந்து கலைச்சதுனாலேதான் போலீஸ் சுட்டாங்க’ன்னு சொன்னே. ஆனா உன் படத்துலே மட்டும் போலீஸு அவுங்களாவே வந்து வேணும்னிட்டே வந்து அட்டகாசம் பண்ணுராங்க. அது எப்புடி?

அப்பாலே கோபாலுதான் சொன்னான்… ‘டேய் டுபாகூரு, படத்துலே வர்றது மும்பை போலீஸூ, அவுங்க வெளங்காதவங்க. ஆனா தூத்துக்குடியிலே இருந்தது தமுள்நாடு போலீஸூ, அவுங்க நல்லவங்க.’


எனுக்கு வந்துதே பாரு கோவம்! ‘இன்னாடா சொல்லுறே நீயு… ஒங்களுக்கு வந்தா ரத்தம், எனுக்கு வந்தா தக்காளி சட்னியா’ன்னு செம சவுண்டு வுட்டேன். புள்ளே கூட பயந்துடிச்சி. தனலெச்சுமிக்குதான் கொஞ்சம் சந்தோசம். நான் மாறிட்டேன்னு நெனச்சிட்டா. 

படம் முடிஞ்சு வர்றப்போ அம்மா கடையிலே சப்பாத்தி குருமா துண்ணுட்டு வூட்டுக்கு வந்தோம்.

அப்போதான் தோணிச்சு… அந்த அம்மா இருந்தா இப்புடி எல்லாம் நடக்குமா… அவன் அவன் கட்சின்றான், நடு சென்டர் மய்யம்ன்றான், தொப்பின்றான், டெல்லிக்கு சலாம் வெக்கிறான், கருப்பு கொடி காட்டறான், ஃபேக்டரிய மூடுன்றான், கேன்சருன்றான், வேலை போயிடும்ன்றான், நிம்மதியா பொழப்ப நடத்த முடியுதா சொல்லு…

சரி அந்த வயசாளிதான் வோணுமின்னா, அவுருக்கும் 95 வயசாயிடுச்சு. சேகருதான், ‘யப்பா, அதல்லாம் பரவாயில்லேப்பா, மலேசியாவுலே ஒரு ஆளு 93 வயசுக்கு பிரதம மந்திரி ஆயிட்டாரு’ன்னான். எப்புடி புள்ளையோட ஜெனரல் நாலட்ஜி!

நீயானா, நெலம் எங்க உரிமைன்னு சொல்லிட்டே. நமக்கெல்லாம் எங்க தலைவா பட்டா கெடைக்கும்? அதுனாலே தான் புள்ளைய படிக்க வக்கிறேன். அதுவும் நல்லா படிக்குது. நீ சொன்னா மாதிரியே தனலெச்சுமிய நல்லா பாத்துக்குவேன்னு சொல்லுறான். சந்தோசமா இருக்குது. 

அது போதும் தலைவா. நீ அரசியலுக்கு எல்லாம் வராதே. துட்டு வேஷ்டாயிடும். பேசாம நம்ம சங்கரு படம் எந்திரன் 2.0 முடிச்ச பிற்பாடு ரிடையர் ஆயிடு. உன் மூடுக்கு எல்லாம் பால்டிக்ஸு சரி வராதுன்னு நெனக்கிறேன்.

மத்தபடி காலா படத்துலே நீ ‘க்யா ரே செட்டிங்கா, வேங்கையன் மகன் ஒத்தையிலே நிக்கேன்’னு சொன்னத வச்சி இன்னும் கொஞ்ச நாள் ஓட்டிட்டு எலீக்சனுக்கு ரெடி ஆவ வேண்டியதுதான்.




தம்பி தனுசு கிட்டே சொல்லு. பணம் போனா போவட்டும். அடுத்த தபா பாத்துக்கலாம். 


ரஞ்சித்து என்னமோ சொல்ல வருது. ஆனா அதுக்கு மசாலா சரியா கலக்க தெரியலியா, ஒரே கார நெடி. வேணும்னா நம்ம வேலு மிலிட்டரியாண்ட போய் கத்துக்க சொல்லு…

உடம்ப பாத்துக்கோ தலைவா.

இப்படிக்கு,
என்னிக்கும் உன் பட ரசிகன்,
ஆர் கே புரம் ஏகாம்பரம்.

Comments

  1. இன்னா சித்தப்பு, ஒரு ரசினி ரசினகா இருந்துபுட்டு இப்படி தலீவன கவுத்துபுட்டீயே....தன்லெட்சுமி உன்கூட இருந்ததாதாலே, முதநாள் முதசோ பார்த்துபுட்ட...யன்ன மாதிரி ஏல பால பாக்கமுடியுமா....எல்லாம் தினகரு துட்டு வேல செய்யுது...

    ஆனா கடைசியில உன்னையும் சப்பாத்தி திங்க வச்சிட்டாரே சேட்டு...

    அத்த வுடு...தம்பி தணுசுக்கு பணம் போச்சுனு முட்ச்சிட்டேயே சித்தப்பு அத நின்ச்சாதான் பயமாக்கீது...ரசினியும் தணுசும் சேர்ந்து அர்ச்சியலுக்கு பணம் சம்பாதிக்க வந்திடுவாங்குளோனு....

    இப்படி புட்டுபுட்டு வச்சிட்டேயே...உன்க்கு கட்சியில வட்டச் செயலாளர் பதவி கூட கிடைக்காதே...உன்ன வச்சு நான் எதனா சம்பாதிக்கலாம்னு பார்த்தேனே...அடிச்சு தொம்சம் பண்ட்டேயே சித்தப்பு...சரி வுட்டுத்தள்ளு ரசினகனா இருந்துகினு இப்புடி மய்யமா கர்த்து சொல்லி கலக்கிபுட்ட சித்தப்பு....வாழ்த்துகள்...

    ராவுக்கு வீட்டாண்ட்டே வரேன் ராவா ட்ரீட் வையு...கவுத்துகிட்டு சோகத்தை மறப்போம்...அப்புறம் அந்த சேகரு கோபால கழ்ட்டி விட்டுரு...இல்லாட்டி அவன்க எந்திரன் 2க்கும் எதனாச்சொல்லி உன்ன இஸ்துகின்னு போய்டுவான்க...

    ReplyDelete
  2. எப்பாடி... இன்னா பேச்சு.

    ReplyDelete
  3. Classic movie ...Starting few scenes wr bit slow and later picked up fully Dharavi Dharavi thaan full story vry seriuosly going and Thalaivar has lived in it ...Sema Gethu acting������ Ranjith has taken vry realistically and Not even single scene is exaggerated or artificial ...Good going to that Creator.....Eswari Rao n Nana patekar ji have acted sooo well and matches so well with Thalaivar....So Masssssss Movie ������

    ReplyDelete
  4. அப்ப அப்பீட்டா?
    நடு சென்டர் மையம்-லாம் too much! வூட்டுக்கு ஆட்டோ தான்! -

    ReplyDelete
  5. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete

Post a Comment