ஏகாம்பரத்தின் பார்வையில் ஜெயிலர்

 



அன்புள்ள ஹுக்கும் ரஜினிக்கு,

ராயபுரம் ஏகாம்பரம் எளுதிக்கிறது…

நைனா, எப்டி கீறே?

இன்னாது, நைனான்னு கூப்புடக்கூடாது, தாத்தான்னு கூப்புடணுமா?

சரி… கூப்டுக்கினா போச்சு. நீ நெசமாலுமே தாத்தாதானே?

நேத்து ராத்திரி ஜெயிலர் படம் திருவாம்மியூர் எஸ்டூலே கண்டுகினேம்பா!

நான் எப்போ திருவாம்மியூர் போனேன்னு கேக்குறியா?

அது ஒண்ணியுமில்லே. நம்ம செயலு ஏதோ ஆக்கியாமே… அத்தோட டோர்னமெண்டு நடக்குதாம். ஏதோ மலேசியா, கொரியான்னு குய்யா முய்யான்னு ஒரே மஞ்சத் தோலு வெளியாளுங்கோ! அவங்களை எல்லாம் இட்டுக்கினு மகாபலிபுரம் பிக்குனிக்கு அழச்சுகிட்டு போணும்னு சொல்லியிருப்பாரு போல…

நம்ம கோவாலுதான் என்னிய இட்டாந்தான்.

அதுலே நான் இன்னா பண்ணுனேனா? ஓ! அது சொல்லல இல்லே! இப்போ நான் கால் டாக்சி ஓட்டுறேம்பா. ஓலா, ஊபரு மாதிரி தனியா… நம்ம சேகருதான் கம்பூட்டரு கம்பெனிலே சேர்ந்ததுக்கு அப்பாலே ‘யப்போவ்! சும்மா கட்சி, அவன் கூப்ட்டான், இவன் கூப்ட்டான்னு போய் உடம்பை கெடுத்துக்காத! நான் ஒரு வண்டி வாங்கித் தரேன். ட்ராவல்ஸ் வண்டி வுடு’ன்னான்.

சரி நமக்கும் வயசாயிடுச்சி. புள்ளிங்கோ சொன்னா கேட்டுக்கணும்னு இப்போ ஒரு வருசமா வண்டி ஓட்டிக்கினு கீறேம்பா.

அப்டியே காண்டிராக்டு புடிச்சி மகாபலிபுரம் போய்ட்டு வரச்சொல்லோ கோவாலுதான், ’டேய் ஏகாம்பரம், தலீவர் படம் வந்துக்கீதுடா’ன்னு சொன்னானா? உட்னே திருவாம்மியூர்லே ஆல்ட்டு!


படம் பத்துக்கு ஆறு பளுதில்லே கண்ணு.

முக்கியமா நீ வயசாளியா நடிச்சே பாரு, அங்கதான் நிக்குறே!

நல்ல காலம்! அந்த வெள்ளத்தோலு காவாலா கூட கண்டி நீ ஆடியிருந்தே பேஜாரா பூட்டிருக்கும்பா!


அத் சரி! கடோசிலே நீலாம்பரி உன்னிய புடிச்சிக்கிச்சா? படையப்பாவுக்கு அப்புறம் அக்கா ரொம்ப அடக்க ஒடுக்கமா ஆயிட்டாங்களே? அதுவும் ஒரு சீன்லே ‘இப்போ உக்காருன்னு சொன்னேனா இல்லியா’ன்னு நீ உதார் வுடவும் அது மூஞ்சியிலே அடிச்ச பேஸ்த்து… சூப்பரு!

படம் முழுக்க நேந்திரங்கா சிப்ஸ் போடறவன் மாதிரி ஒருத்தன் வில்லன் ‘மனசிலாயோ, மனசிலாயோ’ன்னு உன்னாண்ட ராங் காட்டிக்கினு இருந்தான். நான் கூட கோவாலுகிட்டே கேட்டேன், ‘இன்னாடா இது? அவங்க ஆயா மேலே அவனுக்கு அவ்ளோ ஆசையா?’

அதுக்கு அவன், ‘ஏய் டுபாக்கூரு, அது மலையாளம்டா. மனசிலாயோன்னா, புரிஞ்சிச்சா’ன்னு அர்த்தம்னு சொன்னான்.’ அவன் பட்ச்சவன்; நெட்பிளிக்ஸுலே மலையாளப் படம் எல்லாம் பாக்குறான். உனுக்கு எப்புடிடா பிரியும்னு கேட்டா எளுத்து படிச்சு புரிஞ்சுக்குவேன்றான்!






ஆனா, பின்னாடி ஜெயில்லே டோபா, ஒட்டு மீசை எல்லாம் வெச்சுக்கினு அந்த கொல்டி ஆளுகிட்டே ‘அர்த்தம் ஆயிந்தா ராஜா?’ன்னு இஸ்டைல் காட்டும் போது அப்டியே பிகிலுதாம்பா! கொல்டி பாஷை சொல்லு! நமக்கு நல்லா பிரியும்!

நெல்சனாண்ட ஒண்ணு கேக்கணும். கொஞ்சம் கேட்டு சொல்றியா?

கேரளாலேர்ந்து ரெண்டு ஸ்டாரு. ஒருத்தன் கெட்ட வில்லன். நம்ம மோகன் லாலு நல்ல வில்லன்.

பெங்களூருலேர்ந்து நம்ம சிவராஜ்குமார் நல்ல வில்லன்… (ஒண்ணு சொல்லணும்பா! அந்த ஆளு கெத்து அதாரு உதாருப்பா! அதுவும் அந்த குள்ளனை ஃபேன்லே போட்டு சுத்தற சீனு ஒரே சிரிப்பு!)

ஏன், அந்த இந்திக்காரன் ஜாக்கி க்ராப்போ சராப்போ, அவன் கூட இன்னொரு தாதா… நல்லவனாயிட்ட தாதா!




ஆனா…

அக்கடபூமியில மட்டும் வெறும் டொக்கு வில்லன் ஒருத்தனும் காமெடி பீஸு ஒருத்தனையும் இறக்கிகினியே கண்ணு?

நீ ‘இப்புடு சூடு’ன்னு சொன்னதுக்காகவே நாங்க அல்லாரும் தெலுங்கு கத்துக்கினோம் இல்லே? எந்துகு இலா சேஸாவு, தலீவா?

ஒரு வேளை படமே காமெடி. அதுனாலே அவங்கள வச்சி எக்ஸ்ட்ரா காமெடி பண்ணலாம்னு நெல்சன் தம்பி நெனச்சிடுச்சோ?

இல்லே, நம்ம கலாநிதி மாறன் ஐதரபாது டீமை ஐபிஎல்லுலே வெச்சிருக்கிறது உனக்குப் புடிக்கலயா?

இருக்காதே… நீ கூட அவரு பொண்ணு காவ்யா அளுவறத பாக்க கண்றாவியா இருக்குன்னு வேற சொல்லிட்டே!

ஒரே கன்பீசன்!

இன்னாடா ஏகாம்பரம், படத்த பத்தி பேசாம வேற இன்னாவோ பேசிக்கினுகீறேன்னு கேக்குறியா?

வேற இன்னாக்கீது படத்துலே?

தலையை வெட்டுறே! காதை கட் பண்ணுறே! எதுனா கேட்டா, ’32 பீஸ் ஆக்கி கலச்சு போட்டுடுவேன்னு’ சொல்றே! பேசாம ஜெயிலர்னு வெச்சதுக்கு பதிலா ‘கசாப்பு’ன்னு வெச்சுருக்கலாம். 🤣

*****

அப்றோம், இன்னான்னா, படம் விக்ரம் மாதிரியே ஒரு பீலிங்கு குட்துச்சுப்பா…

நீயும் தாத்தா. கமலும் தாத்தா.

அங்கியும் புள்ள செத்துடறான். இங்கியும் புள்ள செத்துடறான்.

அங்கியும் பேரன். இங்கியும் பேரன்.

அங்கியும் டப்பு டப்புன்னு துப்பாக்கி. இங்கியும் துப்பாக்கி… கொஞ்சம் தொட்டுக்க அரிவாளு, டூலுன்னு…

மொத்தமா ஒரு 100 அண்டா ரத்தம் வேஷ்டாயிருக்குமா?

அங்கியும் அனிருத்து காது கிழிய மீஜிக். இங்கியும் அதே அதே.

ஆனாலும்

குட்டிச் சுவரை எட்டிப் பார்த்தா உசுரைக் கொடுக்க கோடி பேரு!

கேக்கும் போது ஒரே மயிரு கூச்சல்பா!

மத்தவன் எல்லாம் குட்டிச் சுவரு. நீதான் தலீவன். நீதான் சூப்பர் ஸ்டாருன்னு சொல்லிக்கினே பாரு. அது!!

*****

நம்ம யோகிபாபு வர்ற சீன் கொஞ்சம் போல கிச்சு கிச்சு மூட்டுச்சு. ஆன் த வேல பொணத்தை போட்டு அந்தாள கலாய்க்கிறது நல்லா இருந்துச்சுப்பா…

சிலை கடத்தல் பெரிய ஆளுங்க செய்யுறதுதான். சாமியவே கடத்தறவங்கள எல்லையம்மா கண்ணு குத்திடும். நிச்சியமா… இன்னா, கொஞ்சம் மெதுவா 40 வருஷம் அந்தாளுங்க நல்லா ஆண்டு அனுபவிச்சிட்டு சந்தோஷமா இருந்ததுக்கு அப்பாலே குத்தும். நம்ம செந்தில் பாலாஜியையும் அவரு தம்பியையும் இப்போ போட்டு தாக்குறாங்க பாரு, அது மாதிரி!

அதுக்கப்புறம் குத்துனா இன்னா, குத்தலேன்னா இன்னான்னு கேக்குறியா? தப்பு, தப்பு… அப்புடி எல்லாம் கேக்கப்படாது. சாமி கண்ணு குத்திடும்!




பெரிய பெரிய சிலை எல்லாம் ஊரு முழுக்க இருக்கும் போது, அது இன்னாப்பா, சேட்டு கல்யாணத்துலே வெக்குற மாதிரி ஒரு தொப்பி! அத்த எடுக்க ஏதோ பெரிசா அப்பாடக்கர் வேலை எல்லாம் செய்வேன்னு பார்த்தா ஒண்ணியும் இல்லே! பக்கத்துலே கோவாலு ஒக்காந்துக்கினு ‘இப்போ இது ஆவும் பாரேன். இப்போ அது ஆவும் பாரேன்’னு நெல்சனாண்டயே இருந்தா மாரி சொல்லிக்கினே வந்தாம்பா!

ஏதோ நீயும் உனுக்கு ஒதவி செய்ய தாதாமார் எல்லாம் இருந்தாங்களோ பொழச்சுது…

*****

ஒரு விஷயம் ஓகேப்பா… இந்த தர்பார், அண்ணாத்த, பீஸ்ட்டு, வாரிசு, துணிவு கருமாந்தரத்துக்கு ஏதோ பரவாயில்லே…

கூட வந்த தனம் இப்போ எல்லாம் அல்லா படத்துலியும் தூங்கிடுது. ‘ரஞ்சிதமே’ பாட்டுக்கே தூங்கிடிச்சின்னா பார்த்துக்கியேன்! ஆனா இதுலே தூங்கலே! ஒருவேளை தலீவர் படத்துலே தூங்குனா நான் திட்டுவேன்னு பயந்துடுச்சோ இன்னாவோ?

நம்ம நீலாம்பரி சொன்னாமாரி உன் இஸ்டைலுதான் கலக்கல். இந்த வயசுலேயும் உடம்பு சும்மா கிண்ணுனு வெச்சுக்கீறே! அது முக்கியம்பா!

*****

ஒண்ணு நிச்சயம்… நீ பாட்டுக்கு தண்ணி அடிக்காதேன்னு சொல்லிட்டே! எல்லா பூமர் அங்கிளும் இனிமே தண்ணி அடிக்க மாட்டோம்னு சத்தியம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க! இப்புடியே போனா டாஸ்மாக்கு இஸ்த்து மூடிடுவாங்களே!

எல்லாரும் நீ இன்னும் ரெண்டு படம்தான்  நடிப்பேன்னு சொல்றாங்க. அது உன் இஷ்டி. ஆனா அதுலியாவது துட்டுக்காக இல்லாம, வெறும் இஸ்டைலுக்காக இல்லாம, கதைக்காக, நல்லா நச்சுனு ஒரு கேரக்டருலே நடிச்சுட்டு ரிடையாகு கண்ணு!

வரட்டுமா…

போயி அடுத்த சவாரியை கவனிக்கணும்.

அன்புடன்

கால் டாக்சி ஏகாம்பரம்

 


Jailer worked better than Beast, Annathey, Darbar, Thunivu and Varisu – but just by that much and not by a mile – all due to one man – Rajinikanth. Special mention to Vinayakam, the ‘Manasilaayo’ villain, Sunil as ‘Blast’ Mohan and Shivrajkumar who steals the show right under the nose of Thalaivar in that cameo. Kaavala song’s dance movements are outrageously contagious. Music was interesting: Loud and thumpy during action/leading-to-action scenes. Otherwise, complete silence.

Well, Nelson is getting into a rut. His forte of deadpan dark comedy is getting repetitive. One is able to recall the earlier tropes from his own movies here, which is not a good sign! Perhaps he should try a new genre.

Jailer 6/10. Watch in theatre if you are a Rajini fan – which I did. Ob…vious…ly!

Otherwise OTT.

Comments