#sriGINthoughts #செவ்வாய்_செந்தமிழ் #இசை #தமிழ்பாடல்கள் (?)
TL;DR: 3 recent Tamil(?!) songs caught the attention. Read on for Tamil. English blurb at the end.
வாழ்க்கை என்றாலே கஷ்டமும் துக்கமும் மாறி மாறி வரும் என ஒரு நண்பன் (’தண்ணி’ போட்டுவிட்டுத்தான்!) சொல்வான். இப்போது கேட்பதற்கும் எழுதுவதற்கும் சிரிப்பாக இருந்தாலும், சிலபல வேளைகளில் அது உண்மைதானே என நான் நினைத்ததுண்டு.
இருந்தாலும் அந்த கஷ்டத்தையும் துக்கத்தையும் தாண்டி அடுத்த
மகிழ்ச்சியைத் தேடி ஓட வைக்க அம்மாவின் வற்றல் குழம்பு, மனைவியின் முறுவல், குழந்தையின்
மழலை, விராட் கோலியின் கவர் டிரைவ், மெஸ்ஸியின் மயக்க ஓட்டம், உடற்பயிற்சியின் வியர்வை
எனப் பல காரணங்கள் இருந்தாலும்…
இசை…
இசையின் வேகமும் ஆழமும் அழுத்தமும் மென்மையும் தரும் மகிழ்ச்சி,
நிம்மதி… அது தனி, சார்!
சரி, இத்தனை முன்னுரை எதற்கு என்கிறீர்களா?
அது ஒண்ணுமில்லீங்க… போன ஒரு பத்து நாளா மூணு பாட்டு நம்ம
டைம்லைன்லே ஒரே லந்து.
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
முதலிலே ஜெயிலர் 2 Ala Bolelo. ஜெயிலர் ஒண்ணுலே நம்ம தமன்னா
வந்து 'காவாலா, காவாலா'ன்னு கேட்டுக் கேட்டு அலைய விட்டாங்க, நெனப்பு இருக்கா? இப்போ
ரெண்டாம் பார்ட்டுலே பூர்ணா அம்மா வெள்ளைச் சேலைலே வந்து செம குத்து… அக்கம் பல போலே,
பக்கம் பல போலே, ரொக்கம் பல போலேன்னு புரியாத உளறலுக்கு நடுவுலே கொஞ்சம் போல குறைஞ்ச
வால்யூமிலே மலையாளம் மாதிரி ஒரு அம்மணி ‘என் கண்ணைத் தேடி போனியா? கவிதை தேடிப் போனியா?’ன்னு
கேள்வி கேட்டு ‘சுந்தரக் கண்ணா! மெத்தைக்கு வா!’ அப்படீன்னு ரஜினி(?)க்கு அழைப்பு
விடுக்க, ‘இதோ வரேண்டி!’ன்னு அனிருத் குரல் கொடுக்க, ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக
ஒரு குத்து சமர்ப்பணம்! #AlaBolelo #Jailer2 #Anirudh #Rajinikanth
#Gibberish #Kuthu
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
அடுத்ததாக அண்ணன் லோகேஷ் ஹீரோவா நடிச்ச DC - Bum Baa Diga Diga அப்படீங்கற English + Malayalam rap-cum-street anthem. ரெண்டு தடவை கேட்டவுடன் ‘விளையாடு மங்காத்தா!’ மாதிரி இருக்கேன்னு நினைச்சேனா… அப்பதான் அந்த பொண்ணு (Is it Dee?) ‘Bum Baa Diga Diga! All Night No Pause’ ரோஜா முள்ளா குத்திடுச்சு! அதுக்கு அப்புறம் மலையாள வேடன் ‘சுருட்டுப் புகை போல பகை எல்லாம் வலிச்சவன் இல்லாதோனா!’ (that little cough after this line was a nice touch!) அப்படீன்னு கதற… மொத்தத்துலே நம்ம வீட்டு அம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிச்சு போயி, இதுதான் என்னோட இந்த வருஷ stress busterனு சொல்ல… வேற அப்பீல் ஏது? #BumBaaDigaDiga #DC #Anirudh #EnglishMalayalam #Rap #StreetAnthem
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
கடைசியாக, டோரோதி (டோரதி?) படத்துலே முத்துமணி! இளையராஜா. அவ்ளோதான். 😊 The human voice rhythm, the wind instruments (flute, nadaswaram, shehnai), Shweta Mohan’s voice, Raaja’s வனக்கிளியே… எல்லாம் திருவாரூர் – கும்பகோணம் வழியில் வளைந்து வளைந்து செல்லும் வழுவழு சாலையில் பெளர்ணமி நிலாவைத் துரத்திக் கொண்டு போகையிலே முகத்தில் விழும் குளிர்ச்சாரல்கள்! நல்லாத்தானே போய்க்கிட்டிருக்குன்னு நினைக்கும் போது… ‘வைரக்கிரீடம் சிரசில் தகதக…’ன்னு ஐயா கொஞ்சம் கரடுமுரடா speedbreaker போட்டுட்டாப்பல! ஆனாலும் ‘ஒரு வழிப் பாதையில் நான் தவிச்சு தவிச்சு நிக்கணுமா, வாடி மீனாட்சி!’ன்னு முடிச்சு நம்மை ஒரு tranceலே விட்டுட்டாரு தேசிகன் ஐயா! #Muthumani #Dorothy #Ilaiyaraaja #Tamil #PsyTrance
No special ranking.
எல்லா பாட்டையும் கேளுங்க! ரசிங்க! சந்தோஷமா இருங்க!
முடிக்கறதுக்கு முன்னாடி, நாட்டுக்கு முக்கியமான கூடுதல் குறியீட்டுச் செய்திகள்:
- ஜெயிலர்2 பாட்டுக்கு பலமான குத்து ஆட்டம் போட்ட பூர்ணா அம்மையார் படப்பிடிப்பு முடிந்த பின் அவர் தாயாகப் போவதை அறிந்திருக்கிறார். கிருஷ்ண பரமாத்மா பேரை வைப்பாங்களோ? அவரும் ஜெயிலிலேதானே பிறந்தாரு?
- லோகேஷுக்கு DC Comics பிடிக்கும். ஆனா இந்தப் படம் - ரத்தம் சொட்ட, கொட்ட எடுக்கப்பட்ட - தேவதாஸ் வெர்ஷன் அப்படீன்னு கேள்வி. You see, D stands for Devdas and C stands for Chandramukhi.
- முத்துமணி பாட்டுக்கு முடிவில் ராஜா ‘வாடி மீனாட்சி!’ என்று ஒலிவாங்கியை உயர்த்தி கெஞ்சுவார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமல் ‘என்னடி மீனாட்சி!’ என அவருடைய பாட்டு மூலம் மைக் தூக்கி உருகியதற்கு homage?
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
Three songs. Three (or four) languages. Three moods.
Well, all are Tamil movies. But music is universal and all that baloney drives us towards language-less lyrics! 😏
So,
…for catchy dance steps and incorrigible gibberish:
Ala Bolelo from Jailer#2
…for street cred, rough and tough lyrics: Bum Baa Diga
Diga from DC (bonus: Raga of Revenge)
…for soulful trance and some nostalgia: Muthumani from Dorothy
You got three songs for three moods!
Enjoy!

Comments
Post a Comment