சரி, சரி... விஸ்வரூபத்தின் முன்னோட்டத்திற்கே ஜல்லி விட்ட நமக்கு இது என்ன ஜுஜுபி!?
படத்துல தலயோட ஒரு வசனம் வரும்:
நல்லவங்கள கண்டுபிடிக்கறது தான் கஷ்டம்!
Actually, அவர் சொல்ல வந்தது...
நல்ல படங்கள கண்டுபிடிக்கறது தான் கஷ்டம்!
பின் வருவது பில்லா பார்த்துவிட்டு நொந்து போய், ஓட்டலுக்குச் சாப்பிட வரும் ஒரு ';தல' ரசிகனுக்கும், அதைவிட நூடுல்ஸ் ஆன ஒரு சர்வருக்கும் இடையே நடந்த / நடந்து கொண்டிருக்கும் / நடக்க இருக்கும் கற்பனை கலக்காத உரையாடல்!
கதை என்ன தெரியுமா? டேய்! சாருக்கு அல்வா எடுத்துட்டு வா! படத்துல கொடுத்த அல்வா போதாது போல இருக்கு?
நடிப்பு பத்தி... சார்! நம்ம மைசூர் பாக்கு பார்க்குறீங்களா - even அது கூட நல்ல எமோஷன் காட்டும் சார்!
ம்யூசிக் என்னமா இருந்திச்சின்னா... என்ன சொல்றீங்க! இந்த ஆட்டுக்கல் சத்தம் தாங்க முடியல!
சின்ன படம்தாம்பா... இட்லிக்கு உளுந்து மூணு மணி நேரம் ஊறப் போடணும்பா! அப்பதான் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்...
செமை ஸ்டைலு... மூணாம் நம்பர் டேபிளுக்கு ஒரு ராக்கெட் தோசை! அது ஸ்டைலு!
என்ன இருந்தாலும் தமிழ் படம் இல்லியா? ஸ்பஸீபா, பழவுஸ்தா... இஸ்வினீட்ஸ் - ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா!
கலக்கலான ஹீரோயினுங்க! சாரிங்க, ஊசிப்போன வடைக்கு ஊறுகாய் எல்லாம் தர முடியாது!
டைரக்ஷன்: இதுக்கு முன்னாடி நான் மணி பார்லே வேலைப் பார்த்துட்டு இருந்தேன்.. அதுனால இந்த சாம்பார், நாயகன் சாம்பார் மாதிரி ஆயிடுச்சி! அதுக்கு அப்புறம் அமெரிக்காவுல கூப்புட்டாக! போனா நம்ம தோஸ்த் எல்லாம் 'என்னா மேன் சாம்பார்! இப்ப எல்லாம் ஸூப்புதான்ன்னு சொல்லிட்டாங்க!' அதுனால அவங்களையும் ஓட்டல்ல சேர்த்துக்கிட்டேன்'. என்னா பயபுள்ள எல்லாம் ஸூப்புன்னு சொன்னா உடனே 'யோ பாய்ஸ், சூப் சாங்!'னு சொல்லிட்டு கொலவெறி ஆட்டம் போடறாங்க!
தல போல வருமா? தலக்கறிதான் என்னிக்கும் பெஸ்ட் சார்... ஆனா, ஒழுங்கான மசாலா இல்லாட்டா அதுகூட வேஸ்ட்டு தான்...
எதுக்கும் ஒரு தடவை படத்தைப் பார்த்துட்டீங்கன்னா... "டேய்! என்னோட வாழ்க்கையில ஒவ்வொரு டாலரும், ஒவ்வொரு அம்பது சென்ட்டும், ஒவ்வொரு இருபது சென்ட்டும், ஏன், ஒவ்வொரு பத்து சென்ட்டும் என் ரத்தத்தை சிந்தி சம்பாதிச்சது டா! சதக்! சதக்! டுமீல்! டுமீல்!
மறுநாள் தினத்தந்தி தலைப்புச் செய்திகள்:
சிங்கப்பூரில் பில்லா-II படம் பார்த்துவிட்டு நடந்த கைகலப்பில் வாலிபர் தன்னை மொக்கைக் கத்தியால் குத்திக் கொண்டு, ஓட்டலில் சாப்பிட வந்தவரை பொம்மைத் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பாட்டில் டிங்க்சர் செலவு!
பில்லா ஒண்ணோடவே நிறுத்தியிருக்கணும்! ஹ்ம்ம்ம்...
கொசுறு: ராத்திரி, பையனுக்காக, படத்துல ஏதாவது நல்லது சொல்ல முடியுமான்னு மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ ரெண்டு விஷயம் தோணிச்சு: (1) டைட்டிலில் வரும் அந்த Sepia-toned இலங்கை புகைப்படக் கதை (2) கடைசியில் பாக்கி credits போடும் போது யுவன் வரும் அந்த MTV Don, Don பாட்டு!
தான் ஆடவில்லையம்மா, சதை ஆடுது!!
கொசுறு: ராத்திரி, பையனுக்காக, படத்துல ஏதாவது நல்லது சொல்ல முடியுமான்னு மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ ரெண்டு விஷயம் தோணிச்சு: (1) டைட்டிலில் வரும் அந்த Sepia-toned இலங்கை புகைப்படக் கதை (2) கடைசியில் பாக்கி credits போடும் போது யுவன் வரும் அந்த MTV Don, Don பாட்டு!
தான் ஆடவில்லையம்மா, சதை ஆடுது!!
வீணாப் போன படத்தைப் பாத்துட்டு வந்து.... பேச்சைப் பாரு.... லொள்ளைப் பாரு.... எகத்தாளத்தைப் பாரு.... :))))))))
ReplyDeleteAvangalum thirundha maattanga ... Naamalum thirundha mattom .... What to do? We are like that only!!!!
ReplyDeleteஇந்த படத்தை ஒரு தடவை பார்ப்பதை விட உங்கள் விமர்சனத்தை நூறு தடவை ரசிக்கலாம் . படத்தில் யோசிப்பவர்களை விட நீங்கள் யோசித்திருப்பது நல்ல பொழுது போக்கு . இதுக்கு பேர்தான் ரூம் போட்டு யோசிப்பதா ?
ReplyDeleteஇந்த படத்தை ஒரு தடவை பார்ப்பதை விட உங்கள் விமர்சனத்தை நூறு தடவை ரசிக்கலாம் . படத்தில் யோசிப்பவர்களை விட நீங்கள் யோசித்திருப்பது நல்ல பொழுது போக்கு . இதுக்கு பேர்தான் ரூம் போட்டு யோசிப்பதா ?
ReplyDeleteநல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
ReplyDeleteஅந்த bottle க்கு நன்றி.
கிரேட் எஸ்கேப்.
விமர்சனம் அருமை
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html
Enna irrunthalum Ajith is Rajini fan.
ReplyDeleteThala pola varuma!!!!!
@Dhoha Talkies: Whoever threw the bottle had a great premonition... Follow that person!!
ReplyDelete