Friday, September 18, 2009

கந்தசாமியும் 'போல்' டான்ஸும்!!

ஏறத்தாழ ஒரு மாசம் முன்னால் கந்தசாமியை ஜெனீவாவில் நம் தோழர்களுடன் பார்த்து பின்னர் சிங்கையில் வந்து மீண்டும் ஒரு முறை கடுமையாக எடிட் செய்யப்பட்ட அதே படத்தைப் பார்த்தேன்.


பார்கவ்: எப்படிப்பா இந்தப் படத்தை ரெண்டாவது தடவை பார்த்தே?
நான்: உங்களுக்காக எப்படில்லாம் தியாகம் செய்யறேன்னு பார்த்தீங்களா?

ஜெனீவாவுக்கும் சிங்கப்பூருக்கும் ஆறு வித்தியாசம்
- இந்த பட சம்பந்தமாகத்தாங்க!ஜெ: தியேட்டரில் மொத்தம் 70 பேர்.
சி: இங்கே மொத்தம் 25 பேர்.


ஜெ: வடிவேல் மொத்தம் முழு நீள நகைச்சுவை காட்டினார்
சி: வைகைப்புயல் வெறுமனே சேவல் டிரெஸ் போடுவதற்கும், ஜெயிலில் குளிப்பதற்கும் மட்டும் வந்தார் :-((


ஜெ: படம் பார்க்க ஆன செலவு 20 பிராங்க்.
சி: படம் பார்க்க ஆன செலவு 100 வெள்ளி (பின்னே, போக வர டாக்ஸி, தியேட்டரில் ரெண்டு தடவை பாப் கார்ன், கோலா இத்யாதி - டிக்கெட் செலவு கடைசியில கம்மிதான்)


ஜெ: அங்கே ப்ரீயா கமெண்ட் அடிக்க முடிஞ்சுது.
சி: இங்கே எதாவது வாயைத் திறந்தாலே தர்மபத்தினியின் "உஷ்!"

மிக முக்கியமான வித்தியாசம்: (sorry! only old picture available ;-)

ஜெ: பாண்டி நம்ம கூட இருந்தாப்பல. அவருக்கு நம்ம முகேஷ் திவாரி - அதாங்க தமிழ் நாட்டின் அடையாளம்! - கடைசியில ஆடுன 'போல்' டான்ஸ் ரொம்பவே புடிச்சிடுச்சி. "ஆமாங்க! பெண்ணுக்கு ஆண் எந்த விஷயத்துலயும் சளைச்சவுங்க இல்லைன்னு காமிச்சதுக்காகவே சுசி கணேசனை பாராட்டணுங்க!!"

சி: ஆஆவ்..!

பி.கு.: மற்றொரு பாதியின் ஸ்கூலில இப்பல்லாம் பொம்பள பசங்க 'அலெக்ரா! அலெக்ரா!'ன்னு தலையை வலிப்பு வந்த மாதிரி ஆட்டிக்கிட்டுத்தான் க்ளாஸுக்குளே வராங்களாம். அவிய்ங்கதான் அப்பிடின்னா, பய புள்ளைய்ங்க 'டேய், இதச் செய்யின்னு' சொன்னா, கோழி மாதிரி தலைய முன்னும் பின்னும் ஆட்டுராங்கன்னு கேள்வி!


அதெல்லாம் டூப்பு! போல் டான்ஸுதான் டாப்பு!!

Other related posts: Prequel & English Review

Tuesday, July 28, 2009

Technology has improved so much!!!

சென்ற வார இறுதியில் நான்கு திரைப்படங்கள் பார்த்தேன். மூன்று ஆங்கிலம், ஒரு ஹிந்தி. அனைத்தும் சுவிட்சர்லாந்து நாட்டு ஓட்டலில் இணையம் வழியாக. (20 வெள்ளி சிண்டாவுக்கோ, மைண்ட்ஸ் பள்ளிக்கோ தானம் கொடுக்க வேண்டும்.)

சுலபமானவற்றை முதலில் கழட்டி விடலாம்.


Hannibal Rising - ஹானிபால் லெக்டராக ஆன்டனி ஹாப்கின்ஸ் நடித்து சகாப்தம் படைத்த கதாபாத்திரத்தின் ஆரம்பத்தைப் பற்றிய கதை என்பதால் ஆர்வத்துடன் புத்தகத்தை சமீபத்தில் படித்து ஏமாந்தேன். அப்பவே தெரிஞ்சு இருக்கணும். விதி வலியது. படம் பண்டல்...


பின்னர் - Dil Chahta Hai - தில் சாஹ்தா ஹை, 2001ல் வெளிவந்த இந்தப் படத்தைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தும், என்னவோ நான் பார்க்காததால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது என்றும் மக்களால் எள்ளி நகையாடப்பட்டேன். கடைசியில், மிஞ்சியது ஏமாற்றமே.

மூன்று உயிர் நண்பர்களின் கதை. காதல்னா நாக்க முக்க என்னும் ஆமீர் கான் ஒரு புறம்; 'சரோஜா பட வெங்கட் பிரபு' மாதிர் சைfப் அலிகான் - பார்த்த பெண்களிடம் உடனே காதல்வயம்; காதல்னா சும்மா இல்ல, அது வயிற்றுக்கு கீழே, குடலுக்கு மேலே, கணையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சதுர செ.மீ பரப்பளவில் ஆரம்பித்துப் பின் உடல், பொருள் ஆவி அனைத்தையும் காலி செய்யும் ஒரு வஸ்து என்று தன்னைவிட 15 வயது வயதான டிம்பிளுக்காக நண்பனையே கன்னத்தில் அறைந்து நட்பைக் காலி செய்யும் அக்ஷய் கன்னா. மேலும், ஆமீர் கானின் ஹீரோ ஸ்டேடஸ் கெடாமல் இருக்க, அவருக்குக் காதலின் உன்னதத்தை இத்தாலிய ஓபெரா வழியாக சிட்னி நகரில் உணர்த்தும் 'பப்லி' ப்ரெட்டி Zன்டா! Sophisticated காதல் ஜல்லி... சரி, சரி, போய்க்கிட்டே இரு!

மற்ற இரண்டும் நல்ல படங்கள். அவற்றைப் பற்றி அடுத்த பதிவுகளில் எழுத உத்தேசம். ஒன்று பீட்டரில்; மற்றொன்று செம்மொழியில். (அப்பதானே ரெண்டு ப்ளாகுக்கும் வியாபாரம் நடக்கும்...)

அதற்கு முன் ஒரு ஐfஓன் சாகசத்தைப் பற்றி...

Tuesday, July 21, 2009

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


நான் பள்ளியில் படிக்கும் போது சம்பத் என்று ஒரு வேதியியல் (அதாங்க கெமிஸ்ட்ரி!) வாத்தியார் இருந்தார்.


அவர்கிட்ட ஒரு நல்ல பழக்கம். ஒரு கெட்ட பழக்கம். ஒரு பயங்கரமான பழக்கம்.

முதல்ல நல்ல பழக்கம். மிக மிக அருமையாக கெமிஸ்ட்ரி சொல்லிக் கொடுப்பார். நம்மளையே 98 வாங்க வச்சிட்டார்னா பாருங்களேன்! (சரி, சரி, நூல் விட்டது போதும்!). கொசுறாக: கோபமே வராது!

கெட்ட பழக்கம்: கவிதை எழுதுவார். அதை ஒரு மாதிரி கர கர தொண்டையில் பாட்டாக வேற பாடுவார். நமக்கு பிஸிகல் கெமிஸ்ட்ரின்னாலே பயம்; அதுக்கும் மேல பிஸிகல் கவிதைன்னா கேக்கவா வேணும். எனக்கு அந்த ரெண்டு மார்க்கு போனதுக்குக் காரணமே அவர் எழுதின 'அத்தை பெற்ற தத்தை' கவிதைதான்னு இன்னிக்கும் பிள்ளைங்ககிட்ட ரீல் விட்டுகிட்டிருக்கேன். (சத்தியமா, அவர் எண்பதுகளிலேயே, சிம்புவுக்கு முன்னாலேயே, அந்தத் தலைப்பில் கொன்னுட்டாருங்க!)

கடைசியா பயங்கரமான பழக்கம்:


ஏற்கனவே, மெத்தில் ஆல்கஹால் அசிடோனோட கலந்தா என்ன ஆகும்னு வயிறு கலங்கிட்டு இருந்தா, இந்த மனுஷன், 1975ல் என்னுடைய ஸ்டூடன்ட் திருமுருகன், காலாண்டு பரீட்சையில் 87.5 மார்க்கு தான் வாங்கினான்; போன வருஷம் ரகுநாத் ஐஐடி பரீட்சை எழுதற அன்னிக்கு பச்சை சட்டை போட்டிருந்தான் - இப்படி எல்லா விதமான பள்ளி சம்பந்தமான - சம்பந்தமில்லாத புள்ளி விபரங்களையும் விரல் நுனியில், ஸாரி, நாக்கு நுனியில் வச்சிருப்பார்.

இப்ப 25 வருஷம் கழிச்சு போனாக்கூட எனக்கு கடைசி ப்ராக்டிகல் டெஸ்டில் அலுமினியம் சல்fஏட் தான் வந்ததுன்னு சொல்லக்கூடிய பரமாத்மா.

இப்படி எல்லாரையும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முயன்ற அவர் எங்கே? வீட்டு போன் நம்பரையே மறந்து செல்பேசியில் 'ஹோம்' தேடி நினைவு படுத்திக் கொள்ளும் நாம் எங்கே?


எதுக்கு சொல்றேன்னா, ஓடி ஓடி நம்ம லைப், பேரே மறக்கற மாதிரி ஆயிடுச்சி! ரெண்டு மிக சமீபத்திய உதாரணங்கள்:


1. ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு முஸ்தபா சென்டருக்கு என்னவோ (ஆங், பொம்மை!) வாங்கப் போயிருந்தேன்! அப்போ பின்னாலிருந்து, 'ஹாய்! ....' அப்படின்னு யாரோ பேர் சொல்லிக் கூப்பிடவும், யாருடான்னு திரும்பிப் பார்த்தா, யாருன்னே தெரியலே! மைக்ரோசெகண்டுலே மூளைக் கசக்கல். ம்ஹூம், சான்ஸே இல்ல! அப்புறம், ரொம்ப வழிஞ்சிட்டு அவரிடம் பேர் கேக்காமலே பேசி (ஈகோ பாருங்க!) அனுப்பி.... அப்பாடா! அன்னிக்கு ராத்திரி, படுக்கைல மல்லாக்க படுத்து யோசிச்சா, ஒரு மணிக்கு ஞாபகம் வந்தது, அடங்கொக்கமக்கா! வெள்ளிக்கிழமை அம்பயர் மீட்டிங்கிலே சந்திச்ச ஒரு பையனாச்சே அதுன்னு...


2. நம்ம வீட்டுலே ஒரு பகுதி நேரத் தமிழாசிரியரா பக்கத்துல இருக்கிற பள்ளிக்குப் போய் தொண்டு செய்துட்டு வருவாங்க. அவங்க கதை ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதை இன்னொரு நாள் பார்க்கலாம். ஆனால் போன வாரம் அவங்களுக்கும் மூளையைக் கசக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்திடுச்சி. ஸ்கூல்லேர்ந்து நடந்து வந்திட்டிருக்கும் போது, நம்ம அம்பயர் தோழர் மாதிரி ஒரு வாண்டு,

"டீச்சர், டீச்சர்! நான் இன்னிக்கு வகுப்புக்கு வரலியே! நீங்க என்னத் தேடினீங்களா?'

இதுக்கு நம்மாளு மனசுக்குள்ளேயே "யார் இந்த வாலு? பேரும் தெரியலே! கிளாஸும் தெரியலே! பேரு கேட்டா ஈகோ போயிடும், என்ன பண்ணலாம்?' (ஆஹா! என்னப் பொருத்தம்!)

கட்ட கடைசியில, டீச்சரம்மா பையனின் சட்டையை நீவி விடும் சாக்கில், அவன் போட்டிருந்த பெயர் பேட்ஜை நைசாகப் பார்த்து 'ஓ, ஜான்! ஏன் வகுப்புக்கு வரவில்லை? நிறைய பாடங்கள் நடத்தி விட்டேனே!' (சுத்தத் தமிழில பேசணும் பாருங்க!) என்று முடிக்க...


சம்பத் சார் 'எப்பூடி?'ன்னு கேட்கிற மாதிரி இருக்கு!

Monday, May 4, 2009

பாண்டி விளையாட்டு - பி.கு.போன பதிவைப் படிச்சிட்டு நம்ம பாண்டி சொன்னதாவது:


'ரொம்ப நன்றிங்க - தமிழ்ல எளுதினதுக்கு. ஏன்னா, நம்ம பயலுங்க எப்பவுமே வெவரமானவய்ங்க! ஒரு இங்கிலீஷ் படத்தப் பார்த்துட்டு, பத்து பேரும் பத்து விதமா புதுப் புதுக் கதை சொல்லுவாய்ங்க! இப்ப நீங்க தமிழ்ல் எளுதிட்டீங்க இல்ல, தப்பு வரதுக்கு சான்ஸே இல்ல, பாருங்க!'
ஆனாலும் இந்த மதுரக்காரவய்ங்களுக்கு ரொம்பவே குசும்பு அதிகம். நன்றி சொல்லிட்டு, கூடவே, டேய்! உன் தாய்மொளியில எளுதாம பீட்டர்ல கதை விட்டா அவ்வளவுதான் றத எவ்வளவு அழகா வாழப்பழத்துல பின் குத்தற மாதிரி சொல்லிட்டாரு பாருங்க!


(அப்பாடா! தலைப்பு பி.கு வந்திடுச்சி)

Saturday, May 2, 2009

கிரிக்கெட்டும் பாண்டி விளையாட்டும்...
கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு ...

அதனால, ஐபிஎல் ஜுரம் எல்லாருக்கும் இருக்கும் இந்த சுப யோக சுப வேளையில் ஒரு 'பசங்க' ஸ்டைல் நினைவலைகள்...


நம்ம ஆபிசிலே ஒரு புது தல வந்திருக்காரு...

'ஐயா, நீங்க எந்த ஊருன்னு' கேட்டா பட்டுன்னு 'மதுரை ஒண்ணு' அப்பிடின்னு பதில் வரும்... அது என்ன 'மதுரை ஒண்ணு?'

'அது ஒண்ணும் இல்லிங்க, எல்லா பயலுகளும், மதுரைன்னாலே எந்த பட்டின்னு கேக்கறாய்ங்க! அதுக்காகத்தான்..'


இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்கும் போது அந்த இடத்துல கலகலப்புக்கு என்ன குறைச்சல் இருக்கும்? அதுவும் ஒரு நாள் முழுக்க சுவிஸ் நாட்டுல மேட்டர் பார்க்க (சாரி, மேட்டர்ஹார்ன் பார்க்க ;-) கூடவே அழச்சிட்டு போனா... ஒரே ரணகளம்தான்...

ஆங்... பார்ட்டியோட பேரு... சரி, பாண்டின்னு வச்சிக்கலாம்.
பாண்டி நம்மகிட்ட அன்னிக்கு எவ்வளவோ விஷயம் சொல்லி இருந்தாலும், அவரு மதுரயில கிரிக்கெட் விளையாடினது பத்தி சொன்ன ரெண்டு மூணு கலக்கல இப்ப நினைச்சாலும் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது...


நம்ம பாண்டியோட இளமைக் காலத்துல, கிரிக்கெட் யார்கூட வேணும்னாலும் விளையாடுவாங்க போல..தெருவுல போற மண்ணெண்ணை (எத்தனை ண?) வண்டிக்காரங்க தான் அந்த காலத்து சேவாக், தோணி எல்லாம்..
தெருக்கூத்துல பீமசேனன் கதாயுதம் சுத்தற மாதிரி, மட்டையை சுற்ற வேண்டியது...

அனுமார் கடலைத் தாண்டுன மாதிரி, தாவித் தாவி பந்து பிடிச்சது - ஆனா லட்டு மாதிரி காட்ச் வந்தா மட்டும் விட்டிடுவோம் (எலே, கண்ணுல மண்ணு விளுந்திருச்சி!)
கத்தி, பாணா, காடா - இப்படி இன்னித்து T20க்கு அன்னிக்கே அச்சாரம் போட்டது அந்த காலத்து வயக்காட்டு மட்டையடிதாங்க!

மேல பாண்டி சொல்றத கேப்போம்...


நம்ம பயலுங்க ரொம்ப மானஸ்தனுங்க... அம்பயர் கையத் தூக்கிட்டா, அவுட்டோ இல்லியோ சத்தியத்துக்கு கட்டுப்பட்டு உடனே வெளிய வந்திருவாங்க...

ஆனாலும் இந்த அம்பயருங்க பண்ற அழுகாணி இருக்கு பாருங்க, ரொம்ப மோசங்க...(பாண்டி, நம்ம தொழிலயே இப்படி கவுக்குறியே!)

இப்பிடித்தாங்க, ஒரு வட்டம் மேட்ச் ரொம்ப சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு... நம்ம டீம் பேட்டிங் பண்ணிட்டிருக்கு... நான் ரன்னர் சைடுலே நின்னுகிட்டிருக்கேன்...
திடீர்னு, போலர் போட்ட பந்து நம்ம பங்காளி கால்ல பட்டிடுச்சி. ஒரே கூச்சல். நம்மாளு அம்பயர பார்த்தான்... அவரு ஆக்காட்டி விரல தலைக்கு மேல தூக்கி விசிறி வீசற மாதிரி ஆட்டவும், அரிச்சந்திரன் மாதிரி, அவுட்டுன்னு நினச்சிக்கிட்டு மரத்தடியப் பாத்து நடக்க ஆரம்பிச்சுட்டான்.
நம்ம எதிராளிங்கல்லாம் ஒரே கும்மாளம்.


நான் ரன்னர் சைடுல நின்னுக்கிட்டு அம்பயர்கிட்ட 'மாப்பிள! அது அவுட்டா?'ன்னு அப்பாவியா கேக்குறேன். அதுக்கு அந்த அழுகாணிப்பய, 'இல்லியே மாப்பிள! அது அவுட்டு இல்லியே! விரல தூக்கி நேராக் காமிச்சாத்தான அவுட்டு, நாந்தான் விரல ஆட்டிக் கிட்டே தான இருந்தேன்! இவிய்ங்க ஏன் இப்பிடி குதிக்கிராய்ங்க?' அப்டீன்னுப்புட்டான்!
அதுக்கப்புறம் என்ன? ஒரே ஸ்டம்புதான், அடிதான்...


இதே மாதிரி, இன்னொரு வட்டம், நம்ம எதிராளிய நம்ம பய அவுட்டு கொடுத்திட்டான். அவ்வளவுதான், அந்த ஆளுக்கு வந்ததே கோவம்... ஓங்கி ஸ்டம்ப ஒரு உதை, குச்சியெல்லாம் பறக்குது...
உடனே, மண்ணெண்ண பார்ட்டிங்களுக்கெல்லாம் ஒரே கடுப்பு.. ஓடிவந்து, 'பாண்டி! நாம தெய்வமா மதிக்கிற ஸ்டம்ப உதைச்சிட்டான்! அவன சும்மா விடக்கூடாது, பாண்டி!' ன்னு அலற ஆரம்பிச்சுட்டாய்ங்க!


டேய்! இதுல தெய்வம் எங்க வந்ததுடான்னு, அப்புறம் அவிய்ங்கள சமாதானப் படுத்தி மேட்சை முடிக்கிறத்துக்குள்ள முழி பிதுங்கிடிச்சி!